முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

நமக

190

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

நமக்கும் உள்ளது ஒன்றேயன்றோ? இவர்க்கு வேற்றுமை என்? என்னில், எத்தாலும், கருமம் இன்றி - அந்த வார்த்தைக்குச் சேர அநுஷ்டானம் உண்டாயிருக்கும்; அதாவது, 1பிராப்பிய ஆபாசங்களிலும் பிராபக ஆபாசங்களிலும் நெகிழ்ந்து, அவனை ஒழிந்த எல்லாவற்றாலும் ஒரு பிரயோஜனமின்றியே இருப்பர் என்றபடி. துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழிதொறும் - கல்பந்தோறும் கல்பந்தோறும் துதி செய்த பாடல்களைக்கொண்டு பாடுவது ஆடுவதாம்படி பண்ணினான். துதி சூழ்ந்த பாடல் - துதி உருவமான பாடல்கள் என்னுதல்; துதிக்கப்படுகிற குணங்களை விளாக்கொலை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல். ‘நின்று’ என்கிறார், 2‘எனக்குக்கொடு’ என்று பிரயோஜனங்களைப் பற்றி அகலுகை இன்றியே இருத்தலின்.

    ‘இப்படி அவன் செய்தற்குக் காரணம் என்?’ என்ன, சொல்லுகிறார் மேல்: ‘எனைத்தோர் பிறப்பும் எதிர்சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால்’ என்கிறார்; அதாவது, ‘எதிர் சூழல் புக்கு ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமாறு போன்று, இவர் பிறந்த பிறவிதோறும் தானும் எதிரே பிறந்து வந்தான்’ என்கிறார் என்றபடி. 3இவர் கர்மமடியாகப் பிறக்க, அவன் அநுக்கிரகத்தாலே பிறந்து வந்தான் இத்தனை. ‘சூழல்’ என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது. ‘விதி’ என்றது, பகவானுடைய கிருபையை. ‘பகவானுடைய கிருபையை விதி என்பான் என்?’ என்னில், இறைவனுக்குத் தப்ப ஒண்ணாதது ஆகையாலே. அதாவது, நாம் நினைத்தவற்றைத் தலைகட்ட ஒட்டாத கர்மம் போன்று, ஈஸ்வரன் நினைத்த காரியங்களையும் கிருபைக்குப் பரதந்திரனாய்த் தலைக்கட்டமாட்டானாகையாலே

____________________________________________________________

1. பிராப்பியாபாசங்கள் - வேறு பயன்கள். பிராபகாபாசங்கள் - வேறு உபாயங்கள்.
  ‘பிராப்பியாபாசம், பிராபகாபாசம்’ என்றால், ‘பிராப்பியத்தைப் போலத் தோன்றுவது,
  பிராபகத்தைப் போலத் தோன்றுவது’ என்பது பொருள். பிராப்யம் -அடையத்தக்கது;
  பிராபகம் - அடைதற்குரிய வழி.

2. யஜூர்வே. 1 : 8. ‘எனக்கு நீ ஒரு பலனைக் கொடு; நான் உனக்கு ஒருபலனைக்
  கொடுக்கிறேன்’ என்று வேறு பிரயோசனங்களைக் கொண்டு நீங்காமல் என்றபடி.

3. ‘சேதனன் கர்மமடியாகப் பிறக்கிறான்; இறைவன் பிறக்கைக்கு அடி என்?’ என்ன
  அருளிச்செய்கிறார், ‘இவர் கர்மமடியாகப் பிறக்க’ என்று தொடங்கி ‘பிறவாப் பிறப்பிலை
  பிறப்பித்தோர் இலையே’ என்ற பரிபாடல் இங்கு ஒப்பு நோக்குக.