முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

என

ஏழாந்திருவாய்மொழி - பா. 6

191

என்றபடி. 1‘தங்களிலும் திருவருளே மிகுந்து இரட்சித்துக்கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்; கொலை செய்தற்குத் தக்கதான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் 2கண்ணழிவு செய்யுமவர்’ என்பர் ஸ்ரீவால்மீகி பகவான். எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே - 3சர்வேஸ்வரனாய் இருந்தும், ஸ்ரீவாமனனாய் வந்து அவதரித்து, மூன்று அடியாலே மூன்று உலகங்களையும் திருவடிகளின்கீழே இட்டுக்கொண்டு, எல்லாரோடும் பொருந்தின சௌலப்யந்தான் பரத்துவம் என்னும்படி என்னை அங்கீகரிப்பதற்கு ஒரு விதி சூழ்ந்தது. 4‘அம்மான் திரிவிக்கிரமனை எனக்கே அருள்கள் செய்ய எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது’ என்க.                             

(6)

_____________________________________________________________

1. ஸ்ரீராமா. சுந். 38 : 34. ‘ககுஸ்த வம்ஸத்தில் பிறந்த சரண்யரான அவ்விராமபிரான்,
  பூமியில் விழுந்தவனும் சரணம் அடைந்தவனுமான அந்தக் காகாசுரன் கொல்லத்
  தக்கவனாயிருந்தும், பரமகிருபையால் அவனைக் காப்பாற்றினார்’ என்பது
  அச்சுலோகத்தின் பொருள்.

  ‘தங்களிலும் திருவருளே மிகுந்து’ என்றது, தங்கட்குக் கேடுவரினும் கிருபையே மிகுந்து
  என்றபடி.

  ‘எந்தை நின்சர ணம்சரண் என்றஇ தன்னால்
  முந்தை நின்குறை யும்பொறை தந்தனம்; முந்துன்
  சந்தம் ஒன்று கொடித்திரன் கண்கள் தமக்கே
  வந்தொர் நன்மணி நிற்கென வைத்ததும் வைப்பாய்.’   

(கம்பரா. சுந். சூடா. 82)

  ‘சித்திரகூ டத்துஇருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட
  அத்திரமே கொண்டுஎறிய அனைத்துலகும் திரிந்தோடி
  ‘வித்தகனே! இராமாவோ! நின்னபயம்!’ என்றுஅழைப்ப
  அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும்ஓர் அடையாளம்.’      

(பெரியாழ். 3. 10 : 6)

  என்னும் பாசுரங்களை நோக்குக.

2. கண்ணழிவு - விளம்பம், கண்ணை அழிக்கை.

3. ‘அம்மான் திரிவிக்கிரமனை எனக்கு என்ன விதி சூழ்ந்தது’ என்று கூட்டிப்பொருள்
  அருளிச்செய்கிறார் ‘சர்வேஸ்வரனாய் இருந்தும்’ என்று தொடங்கி.

4. ‘எனக்கு’ என்பது இரண்டு இடத்தில் வந்திருப்பதால் கூறியது கூறல் ஆகாமைக்கு
  அந்வயம் காட்டுகிறார் ‘அம்மான்’ என்று தொடங்கி. ‘விதி’ என்பதற்குக் ‘கிருபை’ என்று
  பொருள் அருளிச்செய்தாராதலின், ‘அருள்கள்’ என்பதற்குக் கிருபையின் காரியம் என்று
  பொருள் கொள்க.