முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

இவர

ஏழாந்திருவாய்மொழி - பா. 7

193

இவர் 1‘ஜிதம்’ என்ற பின்பு, அவன் புன்முறுவல் பூத்தமையைத் தெரிவித்தபடி. என்று என்று உள்ளி - இதர விஷயங்களினுடைய புன்முறுவலில் உண்டான நினைவு 2அகவாய் கண்டவாறே விட்டு அல்லது நிற்க ஒண்ணாதாய் இருக்கும்; ‘என்றுஎன்று உள்ளி’ என்று அடுக்குத் தொடராற் கூறுகின்றார்.

    பரவிப் பணிந்து - முறை கேடாகக் கூப்பிட்டுச் செருக்கு அற்றவனாய்த் திருவடிகளிலே விழுந்து. இப்பேறுதான், ஒருநாள் உண்டாய் மற்றை நாள் 3மறுக்கை அன்றியே, பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் - கல்பந்தோறும் கல்பந்தோறும் பரம போக்யமான உனது திருவடிகளையே 4அநந்யப் பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனத்தினைத் தந்தாய். இனி, மற்றைய விஷயங்கள் நிலையற்றவை ஆகையாலும், இனியன அல்லாதவை ஆகையாலும், ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை ஆகையாலே, மனம் 5‘சஞ்சலம் அடைந்துகொண்டே இருக்கும் மனம்’ என்கிறபடியே, சஞ்சலம் அடைந்துகொண்டே அன்றோ இருப்பது? அப்படி இன்றியே நித்தியமுமாய் எல்லை இல்லாத போக்கியமுமாய் இருக்கையாலே ‘மருவித்தொழும் மனமே தந்தாய்’ என்கிறார் எனலுமாம். இனி, ‘பழைய மனத்தினைத் திருத்தின

_____________________________________________________________

1. ஜிதம் - தோற்றல்; அதாவது, அடிமை புகுதல்.

2. ‘மக்கள் யாக்கை இதுவென வுணர்ந்து
  மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்.’

(மணிமே. பளிக். அடி, 120, 121.)

  ‘மற்றதனைப் பைம்மறியாப் பார்க்கப்படும்.’                    

(நாலடி. 42)

  ‘பைம்மறியா நோக்கப் பருக்துஆர்க்குந் தகைமைத்து.’
  என்பன ஒப்பு நோக்கத் தக்கன.                            

(இறை. கள. சூ. 1, உரை.)

3. மறுக்கை - ஈண்டு இல்லையாதல்.

4. அநந்யப்பிரயோஜனன் - வேறு பயனைக் கருதாதவன். மனம் எப்பொழுதும்
  மருவித்தொழுவதற்குக் காரணங்கள் இரண்டு. அவையாவன, அநந்யப் பிரயோஜனத்வமும்,
  பகவானுடைய நிரதிசய போக்யத்வமும், அவ்விரண்டு காரணங்களையும் விரிக்கின்றார்
  ‘கல்பந்தோறும்’ என்று தொடங்கும் வாக்கியத்தாலும், ‘மற்றைய விஷயங்கள்’ என்று
  தொடங்கும் வாக்கியத்தாலும்.

5. ஸ்ரீ கீதை. 6 : 34.