முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

அள

194

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

அளவே அன்றி, 1கருவூலத்திலே ஒரு நெஞ்சைத் தந்தாய்’ எனலுமாம்; 2‘உனக்கு ஞானக் கண்ணைக் கொடுத்தேன்’ என்பது போன்று. ‘பழைய மனம் இது’ என்று 3பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாதபடி இராநின்றது என்றபடி. என் வாமனனே வல்லைகாண் - வாமன வேடத்தைக் காட்டி என் மனத்தினைத் திருத்தித் தந்தாய்; அவ்வடிவழகாலே, மஹாபலி ‘என்னது’ என்று இருந்த பூமியை அபகரித்தாய்; ஆதலால், கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்குப் பரிகரம் ஒன்றேயோ?’ என்கிறார். வல்லைகாண் - உகப்பின் மிகுதி.        

(7)

184

        வாமனன்,என் மரகத வண்ணன்,
            தாமரைக் கண்ணினன்,
        காமனைப் பயந்தாய்! என்றுஎன்று
            உன்கழல் பாடியே பணிந்து
        தூமனத் தனனாய்ப் பிறவித்
            துழதி நீங்க, என்னை
        தீமனம் கெடுத்தாய்; உனக்கு
            என்செய் கேன்என் சிரீதரனே?

    பொ-ரை : ‘என் வாமனன், மரகத வண்ணன், தாமரைக்கண்ணினன், காமனைப் பயந்தாய்’ என்றுஎன்று உன் திருவடிகளைப் பாடி வணங்கித் தூய்மை பொருந்திய மனத்தினை உடையேனாய்ப் பிறவியின் துன்பமானது நீங்கும்படி என்னுடைய தீய மனத்தையும் கெடுத்தாய்; என் ஸ்ரீ தரனே! உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்?’ என்கிறார்.

    வி-கு : வாமனன் என்பது முதலிய மூன்றும், படர்க்கைப் பெயர்கள்; முன்னிலைப் பெயர்களாகக் கோடலுமாம். காமளைப் பயந்தாய் என்பது முன்னிலை. ‘பாடி, பணிந்து, மனத்தனனாகி, நீங்க, கெடுத்தாய்’ என முடிக்க. துழதி - துன்பம். ஸ்ரீதரன் - ஸ்ரீயைத் தரித்தவன், ஸ்ரீ - திருமகள்.

    ஈடு : எட்டாம் பாட்டு. 4எம்பெருமான் தம் திறத்திற் செய்த உபகாரத்துக்குப் பிரிதியுபகாரம் காணாது தடுமாறுகிறார்.

_____________________________________________________________

1. திருவாபரணங்கள் முதலியன இட்டு வைக்கும் அறையைக் ‘கருவூலம்’ என்பர்; ’ஸ்ரீ
  பண்டாரம்’ என்றபடி.

2. ஸ்ரீ கீதை, 11 : 18.

3. பிரத்யபிஜ்ஞை பண்ணுதல் - நினைவிற்கு வருதல்.

4. ‘உனக்கு என் செய்தேன்?’ என்றதிலே நோக்காக அவதாரிகை அருளிச்செய்கிறார்.