முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

198

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

வியசனம் ஆறும்படியாக என்றபடி. ‘இன்பம் வளர’ என்றது, ‘அந்தாமத்தன்பு’ தொடங்கிப் பிறந்த பிரீதியினை. வைகல் வைகல் - கழிகிற காலந்தோறும் -உன்னை என்னுள்ளே இருத்தி வைத்தனை. என் இருடீகேசனே - எனக்குப் பரிகாரமாய்ப் பகைத்த இந்திரியங்களும் உன் பக்கலிலே படையற்றன. 1பரம சேஷியைக் கண்டார் துவார சேஷிகள் அளவிலே நில்லார்கள் அன்றே?

(9)

186

        இருடீகேசன், எம்பிரான், இலங்கை
            அரக்கர்குலம்
        முருடு தீர்த்தபிரான், எம்மான், அமரர்
            பெம்மான் என்றுஎன்று
        தெருடி யாகில், நெஞ்சே! வணங்கு;
            திண்ணம் அறி;அறிந்து
        மருடி யேலும் விடேல்கண்டாய்!
            நம்பி பற்ப நாபனையே.

    பொ-ரை : ‘மனமே! நீ அறிவுடையையாகில், நம்பியாகிய பதுமநாபனை, ‘இருடிகேசன் எம்பிரான் இலங்கையில் உள்ள அரக்கர் குலத்தவனான இராவணன் முதலியோருடைய கொடுமைகளை நீக்கிய பிரான், எம்மான், அமரர் பெம்மான்’ என்று என்று கூறி வணங்கு; இதனைத் திடமாகப் புத்தி பண்ணு; அவ்வாறு அறிந்து, பின் கலங்குவாயேயாயினும், இறைவனை விடாதே கொள்,’ என்கிறார்.

    வி-கு : ‘தெருடி, மருடி’ என்பனவற்றிற்குத் ‘தெருள், மருள்’ என்பன பகுதிகள். ‘நம்பி’ என்பது, நமக்கு இன்னான் என்னும் பொருள்பட வந்த உயர்ச்சொல்’ என்பர் தொல்காப்பிய உரைகாரர். (தொ.சொ.சூ. 163,) பத்மநாபன் என்பது, பற்பநாபன் என வந்தது; ‘தாமரை உந்தியன்’ என்பது பொருள்.

    ஈடு : பத்தாம் பாட்டு. 2‘நமக்கு மிகவும் உபகாரகனானவனை நீ ஒரு காலும் விடாதேகொள்’, என்று தம் திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்கிறார் இப்பாசுரத்தில்.

    இருடீகேசன் எம்பிரான் -3தன்னை அறிகைக்குப் பரிகரமாகத் தந்த இந்திரியங்களைக் கொண்டு ஐம்புல ஆசையில் அகப்பட்டு நான் கேட்டினை அடையாமல் தன்னையே அறிகைக்குப் பரிகரமாம்படி

_____________________________________________________________

1. பரம சேஷி - சர்வேஸ்வரன்; இந்திரியங்களுக்கு ஸாக்ஷாத்சேஷி, சர்வேஸ்வரன்
  ஆகையாலே ‘பரமசேஷி’ என்கிறார். ‘துவார சேஷி’ என்றது, சேதநனை.

2. “இருடீகேசன் எம்பிரான்’ என்றதனை நோக்கி, ‘நமக்கு மிகவும் உபகாரகன் ஆனவனை’
  என்கிறார்.

3. ‘இறைவன் செய்த உபகாரத்தை விரிக்கின்றார், ‘தன்னை அறிகைக்குப் பரிகாரமாகத்
  தந்த’ என்று தொடங்கும் வாக்கியத்தால்.