New Page 1
ஏழாந்திருவாய்மொழி - பா. 10 |
199 |
செய்து உபகரித்த
பேருதவியை உடையவன். இலங்கை 1அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் - இலங்கையில்
இராட்சச சாதியில் விபீஷணன் முதலியோரை வைத்து, முருடரான இராவணன் முதலியோர்களை அழித்தாற்போலே
ஆயிற்று, இவருடைய 2அவஸ்தையைத் தவிர்த்தபடி. எம்மான் அமரர் பெம்மான் - இந்திரியங்களினுடைய
இதர விஷயங்களில் உள்ள ஆசையைத் தவிர்த்த மாத்திரமேயன்றி நித்தியசூரிகளுக்குத் தன்னை
அனுபவிக்கக் கொடுக்குமாறு போன்று எனக்குத் தன்னை அனுபவிக்கத் தந்தவன்.
என்றுஎன்று - இப்படிச்
சொல்லாநின்று கொண்டு, தெருடியாகில் - தெருளுதியாகில்; ‘ஞானம் பரவுவதற்கு வழியாகில்’ என்றபடி.
நெஞ்சே வணங்கு -3ஞானேந்திரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான ஏற்றம் உனக்கு
உண்டாகில் உதவியைச் செய்தவனுடைய திருவடிகளிலே விழப்பார். திண்ணம் அறி - இதனை 4‘ஓலக்க
வார்த்தை’ என்று இராமல் திடமாகப் புத்தி பண்ணு. அறிந்து - அறிகைதானே போதுவதாம் பிரயோஜனம்.
அதற்கு மேலே, மருடியேலும் விடேல் கண்டாய் - அவன் வைலக்ஷண்யத்தைப் பார்த்த அளவிலே வருவது ஒரு
பிச்சு உனக்கு உண்டு அன்றே? அதாவது, ‘நாம் இவ்விஷயத்தைத் தூஷிக்கையாவது என்?’ என்று தாழ்மையைச்
சொல்லிக்கொண்டு அகலப்பார்ப்பது ஒன்று உண்டு அன்றே? அதனைத் தவிர்வாய் என்றபடி. நம்பிபற்பநாபனையே
- ‘கெடுவாய், இவ்விஷயத்தை விட்டுப் புறம்பே போய் 5மண்ணை முக்கவோ? 6அவன்
குணபூர்த்தி இருந்தபடி கண்டாயே! வடிவழகு இருந்தபடி கண்டாயே! நமக்கு முன்பு உதவி செய்தபடி கண்டாயே!’
என்கிறார்.
(10)
_____________________________________________________________
1. ‘அரக்கர் குலம் முருடு
தீர்த்த’ என்றதனால், ‘இராட்சச சாதியில் விபீஷணன்
முதலியோரை வைத்து’ என்று பொருள்
அருளிச்செய்கிறார். விபீஷணன் முதலியோர்
முருடு அல்லாமை உணர்க.
2. ‘இந்திரிய அவஸ்தையைத்
தவிர்த்த’ என்றது, இவருடைய இந்திரியங்கள்
அழியாதிருக்கவும் அவற்றினுடைய விபரீதப்
போக்கின் தன்மையைப் போக்கினமையைத்
தெரிவித்தபடி.
3. ‘ஞானேந்திரியங்களுக்கு
வாய்த்தலையான’ என்றது, ‘ஞானேந்திரியங்களால்
உண்டாகக்கூடிய அறிவிற்கு வாய்த்தலை’ என்றபடி.
வாய்த்தலை - மூலம்.
4. ஓலக்க வார்த்தை -
சபையில் கூறும் வார்த்தை.
5. மண்ணை முக்கவோ - மண்ணைத்
தின்னவோ?
6. ‘நம்பி பற்பநாபன்
இருடீகேசன் எம்பிரான்’ என்ற பாசுரப் பகுதியை நோக்கி பாவம்
அருளிச்செய்கிறார், ‘அவன் குணபூர்த்தி
இருந்தபடி கண்டாயே’ என்று தொடங்கி.
|