ன
20 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
னின்றும் நீக்கிப்
பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு’ என்று கூறிய வார்த்தை. ‘‘ஆயின், அவ்வார்த்தை
பொய்யோ?’ எனின், இப்பொழுது தனக்கு உதவாமையாலே பொய் என்று இருக்கின்றாள். ‘ஆயின்,
பொய் என்று இருக்கின்றவள் மெய்ந்நீர்மை தோற்கக் கூடுமோ?’ எனின், இராமாவதாரத்தில் மெய்யும்
1கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்க்கட்குத் தஞ்சம்? ஆகையாலே தோற்றாள்.
உன் மெய்ந்நீர்மை
தோற்றாயே - உன் வடிவில் எழில் இழந்தாயே! ‘காட்சிக்கு இனியதான தண்ணளியேயாய் உலகத்திற்கு
உபகாரமான உன் உடம்பின் ஒளியை அன்றோ இழந்தாய்?’ என்றபடி
(6)
117
தோற்றோம் மடநெஞ்சம்
எம்பெருமான் நாரணற்குஎம்
ஆற்றாமை சொல்லி
அழுவோமை நீநடுவே
வேற்றோர் வகையிற்
கொடிதாய் எனைஊழி
மாற்றாண்மை நிற்றியோ?
வாழி! கனைஇருளே!
பொ - ரை :
எம்பெருமானாகிய நாராயணனுக்கு எங்கள் மடநெஞ்சத்தைத் தோற்றோம்; தோற்று, எங்களுடைய ஆற்றாமையைச்
சொல்லி அழுதுகொண்டிருக்கின்ற எங்களை, செறிந்த இருளே! நீ நடுவே வந்து, பகைவர்கள் தன்மையைக்
காட்டிலும் கொடுமையையுடையாய் வருத்துக்கின்றாய்; காலமுள்ள வரையிலும் இக்கொடுந்தன்மையிலேயே
நிற்பாயோ? கொடுந்தன்மை நீங்கி வாழ்ந்திடுக.
வி - கு :
மேற்கூறிய நாரை முதலாயவற்றையும்
உளப்படுத்தி நிற்றலின் ‘தோற்றோம் என்பது, உளப்பாட்டுத் தன்மைப்பன்மை முற்று. அழுவோம் -
வினையாலணையும் பெயர். ‘எனை’ என்பது, ‘எத்தனை’ என்னும் பொருளையுடைய மரூஉமொழி. மாற்றாண்மை
- பகைமை. கனை - செறிவு.
_____________________________________________________________
1. ‘ஆயுதம் எடேன்’ என்ற
சூளுறவைப் பொய்யாக்கின கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும்
என்றபடி. ஆயுதம் எடானாயின், வீடுமன்
முதல் நாள் கூறிய சூளுறவு பொய்யாதல்
காண்க.
|