முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

187

200

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

187

        பற்பநாபன், உயர்வுஅற உயரும் பெருந்திறலோன்,
        எற்பரன், என்னை ஆக்கிக்கொண்டு, எனக்கே தன்னைத் தந்த
        கற்பகம், என்அமுதம், கார்முகில் போலும் வேங்கடநல்
        வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோ தரனே.

    பொ-ரை : உந்தித் தாமரையை உடையவன், எல்லாருடைய திறலும் இல்லை என்று கூறும்படி உயர்ந்திருக்கின்ற பெரிய திறலை உடையவன், என் பரன், என்னைத் தனக்கு அடிமையாகக்கொண்டு எனக்கே தன்னைக் கொடுத்த கற்பகம், எனக்கு அமுதம் ஆனவன், கரிய மேகம் போன்ற திருவேங்கடமலையை உடையவன், நித்திய சூரிகட்குத் தலைவனான இறைவன் எனக்குத் தந்தை ஆவான்.

    வி-கு : ‘உயர்வற உயர்நலம்’ என்றார் முன்னும். எம் தந்தை - எந்தை. கார்முகில். வெற்பிற்கு அடை. தாமோதரன் -கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன்; உதரம் - வயிறு.

    ஈடு : பதினோராம் பாட்டு. 1‘எல்லாப் பொருள்களைக்காட்டிலும் மிக வேறுபட்ட சிறப்பினனாயிருந்தும், அத்தியந்த சுலபனாய் என்னை அடிமை கொண்டவன் என்னை அல்லது அறியாதவன் ஆனான்,’ என்கிறார்.

    பற்பநாபன் - எல்லா உலகங்களும் உண்டாவதற்குக் காரணமான திருநாபிக்கமலத்தை உடையவன். உயர்வு அற உயரும் பெருந்திறலோன் - பேசப்புக்கால் 2பரிச்சேதித்துப் பேச ஒண்ணாதபடியான சௌர்யம், வீர்யம் முதலிய குணப்பிரதையுடையவன். திறல் - 3பராபிபவந சாமர்த்தியம். திறலைக் கூறியது, மற்றைக்

_____________________________________________________________

1. “பற்பநாபன் உயர்வற உயரும் பெருந்திறலோன்” என்பன போன்ற பதங்களைக்
  கடாக்ஷித்து ‘எய்லாப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்ட சிறப்பினனாய்’ என்கிறார்.
  “தாமோதரன்” என்றதனை நோக்கி ‘அத்யந்த சுலபனாய்’ என்கிறார். அத்யந்த சுலபன் -
  மிக எளியன். “எந்தை” என்றதனை நோக்கி ‘என்னை அடிமை கொண்டவன்’ என்கிறார்.
  “என்றதனை நோக்கி ‘என்னை அல்லது அறியாதவன் ஆனான்’ என்கிறார்.

2. பரிச்சேதித்து -அளவிட்டு. சௌர்யம் -சூரக்தன்மை. வீர்யம் -வீரத்தன்மை. குணப்பிரதை
  -குணப்பிரசித்தி.

3. பராபிபவநம் - பிறரை அவமானப்படுத்தல்.