188
202 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
188
தாமோ தரனைத் தனிமுதல்வனை
ஞாலம் உண்டவனை
ஆமோ தரம்அறிய
ஒருவர்க்கு? என்றே தொழுமவர்கள்
தாமே தரன்உரு வாகிய
சிவற்கும் திசைமு கற்கும்
ஆமோ தரம்அறிய, எம்மானை
என்ஆழி வண்ணனையே?
பொ-ரை :
‘தாமோதரன் என்னும் திருநாமமுடையவனும் உலகங்கட்கெல்லாம் தனித்த காரணமாய் இருக்கின்றவனும்
உலகங்களை எல்லாம் உண்டவனுமான இறைவனுடைய தன்மைகளை அறிவதற்கு ஒருவரால் இயலுமோ?’ என்று கூறிக்
கொண்டு வணங்குகின்றவர்களான, தாமோதரனுடைய சரீரத்தைப் போன்று அவனுக்கு உரிமைப்பட்டிருக்கின்ற
சிவனுக்கும் பிரமனுக்கும் எம்மானாகிய என் ஆழி வண்ணனுடைய தன்மைகளை அறிவதற்கு இயலுமோ? இயலாது’
என்றபடி.
வி-கு :
தொழுமவர்கள் - வினையாலணையும் பெயர். தொழுமவர்களான சிவற்கும் திசைமுகற்கும் என்றும்,
உருவாகிய சிவற்கும் திசைமுதற்கும் என்றும் கூட்டுக. இரண்டாமடியிலுள்ள ‘ஆமோ தரம் அறிய’ என்றது,
பிரமன் சிவன் இவர்களுடைய கூற்று. நான்காமடியினுள்ளது ஆழ்வார் கூற்று. ‘தரம் அறிய ஆமோ?’ என
மாற்றுக. ‘ஆமோ’ என்பது, ‘ஆகுமோ’ என்றதன் விகாரம்.
ஈடு :
பன்னிரண்டாம் பாட்டு. ‘எற்பரன்’ என்கிறபடியே, 1என்னளவில் அவன் செய்தாற்போலே
செய்வார்க்கு அவனைக் காணலாமல்லது, ‘தன் முயற்சியால் அறிவோம்’ என்பார்க்கு அறியப்போகாது
என்கிறார்.
2தாமோதரனைத்
தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோதரம் அறிய ஒருவர்க்கு என்றாயிற்றுப் பிரஹ்மாதிகள்
சொல்லுவது. தாமோதரனை -அவன் அடியார்கட்குப் பரதந்திரனாய் நிற்கிற நிலையை அறியப்போமோ?
தனி முதல்வனை -3‘சத் என்று சொல்லக்கூடியதாய், நாம ரூபங்கள் இன்மையின் ஒன்றாய்,
அடையத் தக்க
_____________________________________________________________
1. ‘என்னளவில்
அவன் செய்தாற்போலே செய்வார்க்கு’ என்றது, என்னளவில் அவன்
திருவருள் செய்தது போன்று திருவருள்
செய்ய நினைத்தார்க்கு’ என்றபடி.
2. ‘தாமோதரனை’ என்றது முதல்
‘ஒருவர்க்கு’ என்றது முடிய, பிரமன் முதலியோர்
வார்த்தை என்கைக்காக அருளிச்செய்கிறார்
‘தாமோதரனை’ என்று
தொடங்கும்வாக்கியத்தை.
3. சாந்தோக்கிய உபநிடதம்.
6. 2 : 1. ஈண்டுக் கூறும் முன்று விதக் காரணத்தை முதற்பத்து
183-ஆம் பக்கம் குறிப்புரையிற்காண்க.
(ஈட்டின் தமிழாக்கம்)
|