இரண
ஏழாந்திருவாய்மொழி - பா. 13 |
203 |
இரண்டாவது பொருள் வேறு
இல்லாததாய் இருந்தது’ என்கிறபடியே மூன்று விதக் காரணமும் தானேயாய் இருக்கிற இருப்பை அறியப்போமோ?
ஞாலம் உண்டவனை - உண்டாக்கி விடுகை அன்றிக்கே, ஆபத்திற்குத் துணைவனாய் நிற்கும் நிலையை
அறியப் போமோ?’ ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு?’ என்றே தொழுமவர்கள் தாமோதரன் உருவாகிய சிவற்கும்
திசைமுகற்கும் தரம் அறிய ஆமோ - தாங்கள் எல்லாம் அறிந்தார்களாக நினைத்து ஆமோ தரம் அறிய
என்றே தொழுமவர்களாய், சர்வேஸ்வரனுக்குச் சரீரத்தைப் போன்று உரிமைப்பட்டு இருக்கின்றவர்களாய்,
அல்லாதாரைக் காட்டிலும் தாங்கள் அறிந்தார்களாக அபிமானித்திருக்கின்றவர்களாய் உள்ள சிவன்
பிரமன் ஆகிய இவர்களாலே தாம் தரம் அறியப்போமோ?
‘யாரைத்தான்?’
என்னில், எம்மானை என் ஆழி வண்ணனை - குளப்படியிலே கடலை மடுத்தாற்போலே, தான் குணக்கடலாய்
இருக்கின்ற இருப்பை எனக்கு அறிவித்தவனை. ‘இப்படி, அவன் தானே காட்ட நான் கண்டாற்போலே காண்பார்க்குக்
காணலாமித்தனை அல்லது தன் முயற்சியால் காண்பார்க்கு அறியப்போமோ?’ என்றபடி.
‘எம்மானை என் ஆழி
வண்ணனைத் தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலமுண்டவனை ‘ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு?’ என்றே தொழுமவர்களாய்த்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசைமுகற்கும் தரம் அறிய ஆமோ?’என்று கூட்டுக.
(12)
189
வண்ண மாமணிச் சோதியை
அமரர் தலைமகனைக்
கண்ணனை நெடுமாலைத்
தென்குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ்மாலை
ஆயிரத்துள் இவைபன் னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப்
பாட்டு அண்ணல்தாள்
அணைவிக்குமே.
பொ-ரை :
அழகிய பெருமை பொருந்திய நீலமணியைப் போன்ற ஒளியுருவனை, நித்தியசூரிகட்குத் தலைமகனை, கண்ணனாக
அவதரித்தவனை, மிக்க வியாமோகத்தையுடையவனைப் பற்றி அழகிய திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ
சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட தமிழ்
|