முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

அன

208

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

அன்றிக்கே நித்தியமாய், விளக்கம் இன்றி இருத்தலன்றி மிக்க ஒளியோடு கூடியதாய், துக்கங்கலந்ததாய் இருத்தல் அன்றிச் சுகத்திற்கே ஓர் இருப்பிடமாய், மங்களமாய், உத்தமமாய், அளவுக்குட்படாததாய் இப்படி இருக்கிற 1முக்தப் பிராப்பிய போகத்தைத் தமக்கும் தம் சம்பந்தம் உடையார்க்கும் அவன் கொடுப்பானாகப் பாரிக்கிறபடியைக் கண்டு, ‘சம்சாரிகளையும் இப்படிப்பட்ட இன்பத்தினை உடையவர்களாகச் செய்ய வேண்டும்’ என்று பார்த்து, அவர்களைக் குறித்து ஹிதம் அருளிச்செய்ய, அது கேட்ட பின்பும் அவர்கள் பழைய நிலையினின்றும் குலையாமல், 2மாலியவான் தொடக்கமானார் இராவணனுக்குச் சொன்ன ஹிதம் போலே அவர்கள் இதனை விரும்பாதிருக்க, ‘நாம் நம்முடைய அனுபவத்தை விட்டு இவர்களோடே துவக்குண்கிற இதற்குப் பிரயோஜனம் என்?’ என்று, வழி பறிக்கும் நிலத்தில் தம் கைப்பொருள்கொண்டு தப்பினார் மகிழ்ச்சியையுடையவர்கள் ஆமாறு போன்று, ‘நாம் முந்துற முன்னம் இவர்களைப் போன்று ஆகாது ஒழியப் பெற்றோம் அன்றோ?’ என்று 3தம் இலாபத்தை அநுசந்தித்து இனியராகிறார்.

190

        அணைவது அரவணைமேல்; பூம்பாவை ஆகம்
        புணர்வது; இருவர் அவர்முதலும் தானே;
        இணைவன்ஆம் எப்பொருட்கும்; வீடு முதல்ஆம்;
        புணைவன் பிறவிக் கடல்நீந்து வார்க்கே.

    பொ-ரை : ‘திருவனந்தாழ்வானாகிற படுக்கையின்மேல் சேர்வது; தாமரைப் பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியின் திருமேனியைக்

_____________________________________________________________

1. முக்தப் பிராப்பிய போகம் - முத்தனாலே அடையப்படுகின்ற இன்பம். ‘தமக்கும் தம்
  சம்பந்தமுடையார்க்கும்’ என்றது, ‘கேசவன் தமர்’ என்னும் திருப்பாசுரத்தை நோக்கி.
  ‘அவன் கொடுப்பானாகப் பாரிக்கிற படியைக் கண்டு’ என்றது, ‘நாடு புகுவீர்’ என்றதனை
  நோக்கி.

2. மாலியவான் தொடக்கமானார் - மாரீசன், விபீஷணன் என்னும் இவர்கள். மாலியவான -
  இராவணனுக்குப் பாட்டன். மாலியவான் சொன்ன ஹிதத்தைக் கம்பராமாயணம் இலங்கை
  காண்படலம் 6 முதல் 16 முடிய உள்ள செய்யுள்களிலும், கும்பகருணன் வதைப்படலம் 32.
  33 ஆம் செய்யுள்களிலும் காண்க. விபீஷணன் கூறிய ஹிதத்தை இராவணன்
  மந்திரப்படலத்தால் உணர்க. மாரீசன் கூறிய ஹிதத்தை மாரீசன் வதைப்படலத்தில் 176
  முதல் 196 முடிய உள்ள செய்யுள்களிற்காண்க.

3. ‘தம் இலாபத்தை அநுசந்தித்து’ என்றது, ‘கண்ணனை நான் கண்டேனே’ என்றதனை
  நோக்கி.