என
|
எட்டாந்திருவாய்மொழி - பா. 1 |
211 |
என்பதற்கு, ‘திருவனந்தாழ்வானோடு
அணைவது’ என்று பொருள் கூறலுமாம். 1‘புல்கும் அணையாம்’ என்றார் பொய்கையாரும்..
பூம்பாவை ஆகம்
புணர்வது -2இன்பமே ஒரு வடிவுகொண்டவளாய் ஒரு காரணத்தால் வந்த பெண்மையினையுடையள்
அல்லாதவளாய் உள்ள பெரிய பிராட்டியாரோடே கலந்து ஒழுகுவது. ஆகம் புணர்வது என்றதனால், 3ஆத்ம
குணங்கள் குமரி இருந்து போமித்தனை. 4மூவர்க்கும் போகம் ஒத்திருக்கையாலே
‘அணைவது, புணர்வது’ என்கிறார். ‘காட்டில் கட்டிய ஆசிரமத்தில் பெருமாள்,
_____________________________________________________________
1.
முதல் திருவந்தாதி, 53.
2. பூ - அழகு ; அதனாலே
இன்பத்தைச் சொல்லுகிறது. ‘பாவை’ என்றதனால், மற்றைப்
பெண்களுக்கும் பிராட்டிக்கும் உள்ள வேறுபாட்டினை
விளக்குகிறார், ‘ஒரு காரணத்தால்"
வந்த’ என்று தொடங்கி.
3. ஆத்ம குணங்கள்
குமர் இருந்துபோம் இத்தனை’ என்பதற்கு, பரமரசிகனான
சர்வேஸ்வரன் பிராட்டியினுடைய திருமேனியின்
சௌந்தர்யம் முதலிய குணங்களில்
ஈடுபட்டதனால் ஆத்ம குணங்கள் பர்யந்தம் சென்றிலன் என்பதும்,
அதனால்,
பிராட்டியின் ஆத்ம குணங்கள் பயன் அற்றுக் கிடக்கின்றன என்பதும் கருத்து. குமரி
இருந்து போதல் - இளம் பருவமுள்ள நங்கையாயிருந்தும் அனுபவ யோக்கியம்
இன்றிக்கே கழிதல். குமரி
- கன்னிப்பெண். ‘மிகுநலம், பெற்றாள் தமியள் மூத்தற்று’ (
குறள்); ‘குமரி மூத்த என் கைப்பாத்திரம்’,
‘குமரி மூத்தஅக் கொடுங்குழை நல்லாள்’
(மணிமேகலை) என்பன ஈண்டுக் கருதத் தக்கன.
4. ‘மூவர்க்கும் போகம்
ஒத்திருக்கையாலே’ என்றது, அக்ர்யப் பிராய நியாயத்தாலே,
பிராட்டியோடே கூட எடுக்கையாலே இவ்விருவர்க்கும்
பிறக்கும் ரசம், சேர்த்தியைக்
கண்டு அனுபவிக்கையாலே திருவனந்தாழ்வானுக்கும் உண்டு என்பதாம்.
இதற்கு
மேற்கோள் காட்டுகிறார், ‘காட்டில் கட்டிய ஆசிரமத்தில்’ என்று தொடங்கி, இச்சுலோகம்,
சங்க்ஷேபராமாயணம். இதற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்: - ரம்யமா வசதம்
கிருத்வா - அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற சக்கரவர்த்தி தன் ஆதரத்துக்குத்
தகுதியாகச் சமைத்த மாளிகைகளிலும்
திருவுள்ளத்துக்குப் பொருந்தி அழகியதாய்
இருந்தது காட்டிலே இளைய பெருமாள் சமைத்த ஆசிரமமாயிற்று.
த்ரயோ ரமமாணா: -
நாயகரான பெருமாள் ரசம் அன்றே பிராட்டியது? பிராட்டிக்குப் பிறக்கும் ரசம்
அன்றே
பெருமாளது? அப்படியே, அச்சேர்த்தி கண்டு உகக்குமவரன்றோ இளையபெருமாள்?
வநே -‘படைவீடர்
காட்டிலே வசித்தார்கள்’ என்று தோற்றாமல், காடர் காட்டிலே
வசித்தாற்போலே பொருந்தி
இருந்தபடி. படைவீடர் - படைவீட்டிலே இருப்பவர்கள்;
படைவீடு - நகரம். அக்ர்யப் பிராயம் - முதன்மை
பெற்றவர்கள் வகுப்பிலே சேர்த்தல்.
இது ஒரு நியாயம்.
|