முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

வந

எட்டாந்திருவாய்மொழி - பா. 2

213

வந்து அவதரிப்பது மோக்ஷத்தைக் கொடுக்கைக்காக ஆகில், எல்லாரும் முக்தராக வேண்டாவோ?’ என்னில், பிறவிக்கடல் நீந்துவார்க்குப் புணைவன் -‘சம்சாரம் என்பது ஒரு பெருங்கடல். அது எங்களால் கடக்கப் போகாது; பிரபலனான நீயே கழித்துத் தரவேண்டும்,’ என்று இருப்பார்க்குப் 1பிரதி பூவாய் நின்று கடத்திக் கொடுப்பான். இனி, ‘புணைவன்’ என்பதற்கு, ‘புணையாமவன்’ என்றும், ‘சர்வபர நிர்வாஹகனாமவன்’ என்றும் பொருள் கோடலுமாம். 2‘ஞானிகள் தேவரீரையே சரணமாக அடைந்து, கொடியதாயும் எல்லை இல்லாத துக்கத்துக்கு இருப்பிடமாயும் இருக்கிற சம்சாரமாகிற கடலைத் தாண்டுகிறார்கள்,’ என்றது காண்க. ‘விஷ்ணு போதம்’ என்று கூறப்பட்டுள்ளது அன்றே? இதனால், ஓர் இடத்தைப் பற்றி நிற்கை அன்றிக்கே, அக்கரையும் இக்கரையுமாய் நிற்கும் ஓடம் என்பது போதரும்.                                  

(1)

191

        நீந்தும் துயர்ப்பிறவி உட்படமற்று எவ்வெவையும்
        நீந்தும்; துயர்இல்லா வீடு முதல்ஆம்;
        பூந்தண் புனல் பொய்கை யானை இடர்கடிந்த   
        பூந்தண் துழாய்என் தனிநா யகன்புணர்ப்பே.

    பொ-ரை : ‘பூக்களையுடைய குளிர்ந்த தண்ணீர் நிறைத்த பொய்கையிலே கஜேந்திரன் அடைந்த துன்பத்தைப் போக்கிய, அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் தரித்த, எனது ஒப்பற்ற தலைவனுடைய சம்பந்தமானது, நீந்தப்படுகிற துன்பத்தையுடைய பிறப்பு முதலாக உள்ள மற்று எல்லாத் துன்பங்களையும் போக்கும்; துன்பம் இல்லாத வீட்டுலகிற்கும் காரணமாம்,’ என்றவாறு.

    வி-கு : இரண்டாமடியிதுள்ள ‘நீந்தும்’ என்பது, மெலித்தல் விகாரம்; ‘நீந்தும்’ என்பது சொல்; இது முற்று. மேலது, பெயரெச்சம்.

_____________________________________________________________

1. பிரதிபூ - ஜாமீன். இது ‘புணை’ என்பதன் பொருள். புணையாமவன் - தெப்பமாய்
  இருப்பவன்; இது இரண்டாவது பொருள்.

2. ஜிதந்தா ஸ்தோத்திரம்.

3. விஷ்ணு போதம் - விஷ்ணுவாகிற ஓடம். இது, விஷ்ணு தர்மம்.

  ‘பனிநின்ற பெரும்பிறவிக் கடல்கடக்கும் படிபற்றி
  நனிநின்ற சமயத்தோர் எல்லோரும் நன்றுஎன்னத்
  தனிநின்ற தத்துவத்தின் தகைமூர்த்தி நீயாகில்
  இனிநின்ற முதல்தேவர் என்கொண்டுஎன் செய்வாரே?’

  என்றார் கம்பநாட்டாழ்வார்.                               

(விராதன் வதைப். 52)