முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

214

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

முதல் காரணம். ‘பொய்கை - மானிடர் ஆக்காத நீர்நிலை’ என்பர் நச்சினார்க்கினியர். புணர்ப்பு -சம்பந்தம்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. ‘என் தனி நாயகன் புணர்ப்பு’ என்கையாலே, ‘எம்பெருமான்தான் வேண்டுமோ? அவனோடு உள்ள சம்பந்தமே மோக்ஷத்தைக் கொடுக்கும்,’என்கிறார்.

    மேற்பாசுரத்தில் ‘பிறவிக்கடல் நீந்துவார்க்கு’ என்ற அதனுடைய விவரணமாய் இருக்கின்றது இப்பாசுரம். நீந்தும் துயர்ப்பிறவி உட்பட மற்று எவ்வெவையும் நீந்தும் - கடக்க அரிதான துக்கத்தை விளைப்பதான பிறப்புத் தொடக்கமான மற்றும் உண்டான 1அபக்ஷயகேடு முதலானவைகளையும் கடத்தும். ‘கடக்க அரிது’ என்பது போதர ‘நீந்தும்’ என நிகழ்காலச் சொல்லால் அருளிச்செய்கிறார். துயர் இல்லா வீடு முதலாம் -துக்கத்தின் வாசனையும் இல்லாத மோக்ஷத்துக்குக் காரணமாம். இனி, இதனை ஒரு தொடராகக் கொண்டு, ‘கடக்க அரிதான துக்கத்தை உடைத்தான பிறவி தொடக்கமாக நீந்தும் துயரான மற்றும் எவ்வெவையும் இல்லாத மோக்ஷத்துக்குக் காரணமாம்’ என்று பொருள் கோடலுமாம். 2இப் பொருளில், இரண்டாம் அடியிலுள்ள ‘நீந்தும்’ என்பதும் பெயரெச்சம். இவர் ’வீடு’ என்கிறது, பிறவி நீங்குதல் மாத்திரத்தை அன்று; சுகமாக இருத்தலையே இலக்கணமாகவுடைய பகவானிடத்தில் அனுபவிக்கும் அனுபவத்தைச் சொல்லுகிறது. ‘ஆயின், வீடு என்ற சொல் பகவானிடத்தில் அனுபவிக்கும் அனுபவத்தைச் சொல்லுமோ?’ எனின், 3‘முக்திர் மோக்ஷா மஹாநந்த’ என்பது நிகண்டு.

    ‘இப்படித் துக்கத்தைப் போக்கி வீட்டிற்குக் காரணமாதலை எங்கே கண்டோம்? என்னில், சொல்லுகிறார் மேல்: 4பூந்தண்புனல்

_____________________________________________________________

1. ‘அபக்ஷய கேடு முதலானவைகள்’ என்றது, உண்டாதல், பிறத்தல், பரிணமித்தல், வளர்தல்,
  குறைதல், மரணம் என்பனவற்றை அபக்ஷயம்-குறைதல்.

2. இப்பாசுரத்தின் முதல் இரண்டு அடிகட்கு, இரண்டு வகையாகப் பொருள்
  அருளிச்செய்கிறார். முதற்பொருள், அநிஷ்ட நிவர்த்தி பூர்வமாக இஷ்டப் பிராப்தியைச்
  சொல்லுகிறது. இரண்டாவது பொருள், கேவலம் இஷ்டப் பிராப்தியைச் சொல்லுகிறது.

3. ‘முத்தி என்பதும், மோக்ஷம் என்பதும், பெரிய ஆனந்தம் என்பது ஒரு பொருளன’
  என்பது பொருளாம். இங்கு மோஷத்திற்கு ‘மஹானந்தம்’ என்ற பெயர் இருத்தல்
  கருதத்தக்கது.

4. ‘யானை இடர் கடிந்த’ என்பதற்கு மூன்று பொருள் அருளிச் செய்கிறார். மூன்றாவது
  பொருளால், யானையினுடைய மேலான குணம் விளங்கும்.