முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

216

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

    பொ-ரை : ‘தன்னை உண்டாக்கிய உந்தியோடு பொருந்தி உலகத்தை எல்லாம் படைக்கின்ற பிரமனும் ஆவான்; திருமேனியில் வலப்பாகத்தில் பொருந்தி உலகங்களை எல்லாம் அழிக்கின்ற சிவனும் ஆவான்; தனது திருமார்வில் சேர்க்கப்பட்ட பெரிய பிராட்டியாரை உடையனாய்த் தனக்குத் தகுதியான செயலை உடையனாய் இருக்கிற எம்பெருமானுடைய பெரிய காரியங்கள் எங்கும் காணக் கூடியனவாய் இருக்கும்’ என்றவாறு.

 

    வி-கு : ‘தன் புணர்த்த உந்தியோடு மன்னிப்புணர்க்கும் அயன் ஆம்; ஆகத்து மன்னி அழிக்கும் அரன் ஆம்; தன் மார்வில் புணர்த்த திரு ஆகி, தான் சேர் புணர்ப்பன் பெரும்புணர்ப்பு எங்கும் புலன்’ எனக் கூட்டுக. மூன்றாமடியிலுள்ள புணர்த்தல் - சேர்த்தல். புணர்ப்பன் செயலையுடையவன். புணர்ப்பு - செயல்.

 

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘இருவர் அவர் முதலும் தானே’ என்கிற பதங்களை விவரியாநின்றுகொண்டு, ‘திருமகள் கேள்வனுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களை எங்கும் பார்க்கலாம்’ என்கிறார்.

 

    புணர்க்கும் அயன் ஆம் - இவற்றைப் படைத்தலையே தொழிலாகக் கொண்டிருக்கிற பிரமனும் ஆம். அழிக்கும் அரன் ஆம் - சுடுதடி போலே இவற்றை அடைய அழித்துக் கொண்டிருக்கிற சிவனும் ஆம். 2‘அந்த நாராயணனால் நன்கு காண்பிக்கப்பட்ட படைத்தல் அழித்தல் என்னும் தொழில்களை உடையவர்களாய்ப் படைத்தல் அழித்தல்களைச் செய்கிறார்கள்’ என்றும், 3‘பிரமனே! உன்னிடத்தில் அந்தாரத்துமாவாய் நின்று சிருஷ்டியைச் செய்யப்போகிறேன்’ என்றும் வருகிறபடியே, அவன் அந்தராத்துமாவாய் நின்று நடத்துவிக்க இவற்றைச் செய்கிறார்கள். புணர்த்த தன் உந்தியோடு மன்னிப் புணர்க்கும் அயன் ஆம் ஆகத்து மன்னி அழிக்கும் அரன் ஆம் - இவைதாம் இவர்கள் செய்ய வல்லராவது அவன் திருமேனியைப் பற்றி இருந்த போதாயிற்று; பால் குடிக்கும் குழந்தை வாயில் முலை வாங்கினால் தரியாதது போன்று, இவர்களும்

_____________________________________________________________

 

1. ‘ஆகத்து மன்னி’ என்பதனையும், ‘புணர்த்த திரு ஆகி’ என்றது முதல் ‘எங்கும் புலனே’
  என்றது முடிய உள்ளவற்றையும் நோக்கி அவதாரிகை அருளிச்செய்கிறார்.

 

  அதிமானுஷ சேஷ்டிதங்கள் - மனிதர்கள் செயல்களுக்கு அப்பாற் பட்ட செயல்கள்.

 

2. பாரதம், சாந்தி பர்வம், 169.

 

3. விஷ்ணு தர்மம்.