வழ
218 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
வழியாலே நடத்தியும், தான்
மேற்கொண்ட காரியங்களைத் தானே நடத்தியும் போருகையாலே தன்னுடைய 1யானைத் தொழில்கள்
எங்கும் காணலாய் இருக்கும்.
(3)
193
புலன்ஐந்து மேயும்
பொறிஐந்தும் நீங்கி
நலம் அந்தம்
இல்லதுஓர் நாடு புகுவீர்!
அலமந்து வீய
அசுரரைச் செற்றான்
பலம்முந்து சீரில்
படிமின்ஓ வாதே.
பொ-ரை :
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்து புலன்களிலும் 2மேய்கிற ஐம்பொறிகட்கும்
வசப்பட்டு இருத்தலைத் தவிர்ந்து, ஆனந்தம் முடிவு இல்லாததாய் ஒப்பு அற்றதாய் உள்ள வீட்டு உலகின்கண்
செல்ல இருக்கின்றவர்களே! மனம் சுழன்று அழியும்படி அசுரர்களை அழித்தவனுடைய பலம் முற்பட்டிருக்கின்ற
நற்குணங்களில் இடைவிடாமல் மூழ்குங்கள்’ என்றவாறு.
வி-கு :
‘நீங்கிப் புகுவீர்’ என்றும், ‘வீயச் செற்றான்’ என்றும் முடிக்க. ‘ஓவாது படிமின்’ என மாற்றுக.
அலமரல் - மனம் சுழலல்; ‘அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்.
‘சீரில் படிமின் ஓவாதே’ என்ற இவ்விடத்தில் ‘நற்குணக்கடல் ஆடுதல் நன்றரோ’ என்ற கம்பர்
திருவாக்கை ஒப்பு நோக்குக. ‘நலமந்த மில்லதோர் நாடு’ என்ற இப்பெரியாருடைய திருவாக்கைப்
பின் பற்றியே திருக்குறள் உரையில், பல இடங்களில் வீட்டினை ‘அந்தமில் இன்பத்து அழிவில்
வீடு’ என்று எழுதிச் செல்வர் ஆசிரியர் பரிமேலழகர்.
ஈடு :
நாலாம் பாட்டு. 3‘அவனுடைய பரத்துவத்தில்
கண்ணழிவு அற்றிருந்தது; இனி, இதற்கு அவ்வருகு இல்லை என்னும் நன்மை பெறவேண்டும்’ என்று
இருப்பார் அவனை விரைவில் அடைவதற்குப் பாருங்கோள்’ என்கிறார்.
புலன் ஐந்து மேயும்
பொறி ஐந்தும் நீங்கி - புலன் ஐந்து என்றது, 4விஷயங்களை; அவற்றிலே விருப்பத்தைச்
செலுத்துகின்ற பொறி ஐந்து என்றது, மெய் வாய் கண் மூக்குச் செவிகளை; அவற்றிற்கு
_____________________________________________________________
1. யானைத் தொழில் - அதிமானுஷ
சேஷ்டிதங்கள்.
2. ‘புலன் ஐந்தும் ஏயும்’
எனப் பிரித்தலுமாம்.
3. ‘அவனுடைய பரத்துவத்தில் கண்ணழிவு
அற்றிருந்தது’ என்றது, மேற்பாசுரத்தின்
அநுவாதம். கண்ணழிவற்றிருத்தல் - சலனமின்றி உறுதி
உடைத்தாயிருத்தல்.
4. ‘விஷயங்களை’ என்றது, சுவை, ஒளி,
ஊறு, ஓசை, நாற்றங்களை.
|