வதற
220 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
வதற்குப் பாருங்கோள். இனி, 1‘நானும் சொன்னேன்; நமரும் உரைமின் நமோநா ராயணமே,’ என்றது போன்று,
தமக்குச் சுவையாய் இருத்தலால் ‘இடைவிடாமல் அனுபவியுங்கோள்’ என்கிறார் எனலுமாம்.
(4)
194
ஓவாத் துயர்ப்பிறவி
உட்படமற்று எவ்வெவையும்
மூவாத் தனிமுதலாய்
மூவுலகும் காவலோன்
மாவாகி ஆமையாய்
மீனாகி மானிடம்ஆம்
தேவாதி தேவ
பெருமான்என் தீர்த்தனே.
பொ-ரை :
‘ஹயக்கிரீவனாகி, ஆமையாகி, மீனாகி, இராமன் கிருஷ்ணன் முதலிய மனிதவடிவமும் ஆன, தேவர்கட்கும்
தேவர்களான நித்தியசூரிகட்குத் தலைவனாகிய என் தீர்த்தன், இடைவிடாத துன்பத்தையுடைய பிறப்பு
முதலாக மற்றும் உள்ள எல்லாவற்றுக்கும் சோம்புதல் இல்லாத தனித்த காரணனாகி மூன்று உலகங்களையும்
பாதுகாக்கின்றவன் என்றவாறு.
வி-கு :
‘ஓவா, மூவா’ என்பன, ஈறு கெட்ட எதிர்மறைப்பெயரெச்சங்கள் மூத்தல் - சோம்புதல் அல்லது, அழிதல்.
‘ஆய்’ என்னும் செய்தெனெச்சம், ‘காவலோன்’ என்னும் வினையாலணையும் பெயர் கொண்டது. ‘ஆம்
பெருமான்’ என்க. தீர்த்தன் - பரிசுத்தம் ஆக்க வல்லவன்.
ஈடு :
ஐந்தாம் பாட்டு. ‘இணைவன்ஆம் எப்பொருட்கும்’ என்றார்; அதனை விரிக்கிறார்.
ஓவாத் துயர்ப்பிறவி
உட்பட மற்று எவ்வெவையும் - உச்சி வீடும் விடாத துயரை விளைக்கக் கூடியதான 2ஜன்மம்
தொடக்கமாக மற்றும் உண்டான ஐந்தற்கும், அவற்றை உடையவான பொருள்கட்கும். மேல் ‘நீந்தும் துயர்ப்பிறவி’
என்றார்; இங்கு ‘ஓவா’ என்கிறார்; இதனால், ‘ஒருகால் விட்டுப் பிடிக்குமதுவும் இல்லை’ என்கிறார்
என்று கொள்க. ‘மூவா’ என்பதனை, ‘மூவாப்பிறவி’ என்று மேலே உள்ள பிறவிக்கு அடைமொழியாக்கிப்
பிரவாஹரூபத்தாலே நித்தியமாகச் செல்லுகிற பிறவிக்குத் தனிமுதல் என்னுதல்; அன்றி, ஆற்றொழுக்காகத்
தனி முதலுக்கே அடைமொழி
_____________________________________________________________
1. பெரிய திருமொழி,
6 . 10 : 6.
2. ஜன்மம் தொடக்கமாக
மற்றும் உண்டான ஐந்தையும் மேலே 127 - ஆம் பக்கக்
குறிப்புரையிற் காண்க.
|