ய
எட்டாந்திருவாய்மொழி - பா. 5 |
221 |
யாக்கி, முசியாத தானே
தனித்த காரணம் என்னுதல். 1முசியாத காரணமாவது, தன்பக்கலிலே வழிபடவேண்டும் என்று
நினைத்து உறுப்புகளைக் கொடுத்துவிட, கொடுத்த, 2உபகரணங்களைக் கொண்டு வழிகெட
நடவாநின்றால், ‘இப்போது இங்ஙனே போயிற்றதாகில், கிரமத்திலே நம் பக்கலிலே ருசியைப் பிறப்பித்து
மீட்டுக் கொள்கிறோம்’ என்று அவர்கள் விருப்பின்படி விட்டு உதாசீனனாய் இருக்கும்; இப்படி,
தன் நினைவைப் தப்பிப் போகச் செய்தேயும், கிருஷிகன் ஆனவன் ‘ஒருகால் பதர்த்ததே அன்றோ?’
என்று சோம்பிக் கைவாங்காதே மேலே மேலே கோலுமாறு போன்று, ‘ஒரு கால் அல்லா ஒருகாலாகிலும்
ஆகிறது’ என்று படைத்துக்கொண்டே இருத்தல். 3‘சோம்பாது இப்பல் உருவை எல்லாம்
படர்வித்தவித்தா’ என்றார் பெரிய திருவந்தாதியில்.
‘இப்படி, இவன்
படைத்துக் காப்பது எவ்வளவு?’ என்னில், ‘மூன்று உலகங்களும்’ என்கிறார் மேல்: அதாவது, படைக்கப்படுகின்ற
உலகங்களின் எல்லையளவும். மூவுலகு -4கீழும் மேலும் நடுவும் என்னுதல்’ கிருதகம், அகிருதகம்,
கிருதகாகிருதகம் என்னுதல். காவலாவது, சாஸ்திரங்களைக் கொடுத்தல் முதலியவைகளாலே காத்தல்.
‘இப்படிக் காத்தல் தன் மேன்மை குலையாதே நின்றோ?’ என்னில், ‘கர்மங்கட்குக் கட்டுப்படாதவன்
கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களைப் போன்று பிறந்தாயிற்றுக் காப்பது’ என்கிறார் மேல். மா
ஆகி - ஹயக்கிரீவமூர்த்தியாய் அவதரித்தபடி. ஆமை ஆய் மீன் ஆகி -5சாஸ்திரங்களுக்குக்
காரணமான அவதாரங்கள். மானிடம் - இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்கள். இவை
_____________________________________________________________
1. முசியாத -சோம்பாத.
2. உபகரணங்கள் - கரண
களேபரங்கள், பதர்த்தது - பதராயிற்று.
3. பெரிய திருவந். 18.
4. ‘கீழும்’ என்றது, பூமிக்குக்
கீழேயுள்ள ஏழ் உலகங்களை; ‘மேலும்’ என்றது, பூமிக்கு
மேலேயுள்ள ஆறு உலகங்களை; ‘நடுவும்’ என்றது,
இப்பூவுலகத்தை. பூலோகம்,
புவர்லோகம், சுவர்லோகம் என்னும் மூன்றும் கிருதகம்; ஜனலோகம்,
தபோலோகம்,
சத்தியலோகம் என்னும் மூன்றும் அகிருதகம்; மகர்லோகம் ஒன்றும், கிருதகாகிருதகம்-
செய்யப்படுவது; அழிவது, அகிருதகம் - செய்யப்படாதது; அழியாதது. கிருதகா
கிருதகம்
- செய்யப்பட்டும் செய்யப்படாமலுமிருப்பது; அழிந்தும் அழியாமலுமிருப்பது. இங்குக்
கூறியவையெல்லாம்
தினப்பிரளயத்தில் எனக் கொள்க.
5. இவ்வவதாரங்கள் மூலமாகச்
சாஸ்திரங்கள் வெளிவந்தனவாதலின், ‘சாஸ்திரங்களுக்குக்
காரணமான அவதாரங்கள்’ என்கிறார்.
|