ஈ
|
எட்டாந்திருவாய்மொழி - பா. 6 |
223 |
ஈடு :
ஆறாம் பாட்டு. ‘நீர் சொல்லுகிறவனுக்கு இந்த உயர்வுகளெல்லாம் உண்டோ?’ என்ன, ‘முன்பே
அருச்சுனன் நிரூபித்து நிர்ணயித்த அர்த்தம், நாம் இன்று ஆராயும்படி குறைபட்டு இருந்ததோ?’ என்கிறார்.
தீர்த்தன் -1‘தன்
தலையிலே தரிக்கப்பட்டிருக்கிற எவருடைய ஸ்ரீபாத தீர்த்தமான கங்கையினால் அச்சிவன் பரிசுத்தன்
ஆனான்?’ என்றும், 2‘நான் தக்கோன் ஆனேன்’ என்னும் நிச்சயக் கருத்தால் பரிசுத்தத்திற்காகத்
தன் சடைமுடியில் கங்கையைத் தரித்தான் என்றும் சொல்லுகிறபடியே, தன் திருவடிகள் தீண்டுதலாலே
அசுத்தரையும் சுத்தர் ஆக்க வல்ல சுத்தியை உடையவன். ‘இது எப்பொழுது செய்தது?’ என்னும் அபேக்ஷையிலே,
‘உலகு அளந்த காலத்திலே’ என்று அதனை நிரூபிக்கிறார் மேல். 3‘குறைகொண்டு’ என்றார்
திருமழிசை மன்னனும். உலகு அளந்த சேவடிமேல்
_____________________________________________________________
1. ஸ்தோத்திர ரத்தினம்.
2. ஈஸ்வர சம்ஹிதை.
இவ்விடத்தில்,
‘புவிஅ ளந்தவன்
பொன்னடித் தாமரை
தவழும் கங்கைஅம்
தண்புனல் பொன்னென
அவிர்ச டாமுடி
மீதுவைத் தன்றுகொல்
சிவனும் ஓர்சிவ னாகித்
திகழ்ந்தனன்.’
என்ற செய்யுள் ஒப்பு நோக்கலாகும்.
(பாகவதம், 3-ஆம் ஸ்கந்தம், கபிலர் தத்துவம் உரைத்த அத். செய். 51).
‘தேனந்து
சோலை அரங்கேசர் சேவடி மேல்விசயன்
தானந்த நாளையிற்
சார்த்திய மாலையும் தாள்விளக்கும்
வானம்
தரும்கங்கை நன்னீரும் சென்னியில் வைக்கப்பெற்ற
ஆனந்தத் தான்அல்ல
வோமுக்க ணான்மன்றுள் ஆடுவதே?’
(திருவரங்கக்கலம். 45.)
என்ற திவ்விய கவியின்
கவிச்சித்திரம் இங்குக் கண்முன் நிற்கிறது.
3. ‘குறைகொண்டு நான்முகன்
குண்டிகைநீர் பெய்து
மறைகொண்ட மந்திரத்தால்
வாழ்த்திக் - கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேல்
ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு.’
(நான்முகன் திருவந். 9.)
‘குறைகொண்டு - தன்னுடைய
செல்லாமையை முன்னிட்டுக்கொண்டு. நான்முகன்
குண்டிகைநீர் பெய்து - அருகே நின்ற தர்ம தத்துவம்
ஜலமாய் இவன் குண்டிகையிலே
பிரவேசித்தது, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -ஸ்ரீ புருஷசூக்தாதிகளைக்
கொண்டு
துதித்து. கறை கொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் -‘யுக்தாயுக்த
நிரூபணம்
பண்ண அறியாதே இவன் அநீதியிலே கைவளராநின்றான்; அது போக
வேணும்’ என்று இவன் ஜடையிலே ஏறும்படி
அவன் திருவடிகளை விளக்கினான்;
ஸ்ரீபாததீர்த்தம் கொண்டு துஷ்புத்திரர்கள் தலைகளிலே தெளிக்குமாறு
போன்று’ என்பன
மேல் பாசுரத்துக்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்.
|