க
எட்டாந்திருவாய்மொழி - பா. 7 |
225 |
காண்டல். ‘ஆயின், இவ்விடத்தில்
கிருஷ்ணனுடைய சரிதை ஆயிற்றுச் சொல்லுகிறது; ஸ்ரீவாமன அவதாரம் என்?’ என்னில், 1கிருஷ்ணாவதாரத்துக்கும்,
வாமன அவதாரத்துக்கும் வரையாதே எல்லாரோடும் பொருந்துமது உண்டு ஆகையாலே சொல்லுகிறார். பார்த்தன்
தெளிந்து ஒழிந்த - இறைவன் சாரதியாய்த் தாழ நிற்கச் செய்தேயும், அவனுடைய இறைமைத்தன்மையில்
கலங்காமல், ‘அந்தப் பார்த்தன் பெரிய ஞானத்தையுடையவன்’ என்கிறபடியே பேரறிஞனான அருச்சுனன்
நிரூபித்து நிர்ணயித்து, 2‘தேவரீருக்கு முன் பக்கத்திலும் வணக்கம், பின் பக்கத்திலும்
வணக்கம்,’ என்று கூறிப் பின் பற்றிய. பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே
- அறப்பெரிய முதன்மைக்கு அறிகுறியான திருத்துழாய் மாலையையுடைய சர்வேஸ்வரனுடைய பரத்துவம், இன்று
அறிவு கேடர் சிலரால் 3செல்லவிட்டு ஆராயுமளவாய் இருந்ததோ?
(6)
196
கிடந்துஇருந்து நின்றுஅளந்து
கேழலாய்க் கீழ்ப்புக்கு
இடந்திடும்; தன்னுள்
கரக்கும்; உமிழும்;
தடம்பெருந்தோள்
ஆரத் தழுவும்;பார் என்னும்
மடந்தையைமால் செய்கின்ற
மால்ஆர்காண் பாரே?
பொ-ரை :
‘அறப்பெரிய இறைவன் பூமி தேவியை, கடற்கரையில் வழி வேண்டிக் கிடந்தான்; சித்திரகூட மலையில்
முனிவர்களோடு இருந்தான்; இராவணனைக் கொன்ற பின்னர் வீர இலக்குமியோடு நின்றான்; மூன்று
அடிகளால் அளந்தான்; வராகமாகிக் கீழே புக்கு இடந்து மேலே கொண்டு வந்தான்; பிரளய காலத்திலே
தன்னுள் மறைத்தான்; மீண்டு உமிழ்ந்தான்; வலிய பெரிய தோள்கள் இன்பத்தால் பூரிக்கும்டி
தழுவினான்; ஆதலால், பூமிபிராட்டி விஷயமாகச் செய்கின்ற அன்பு நிறைந்த காரியங்களைக் காண்பார்
யாவர்?’ என்கிறார்.
வி-கு :
மால் - திருமால். இரண்டாவது மால் - மயக்கம். ‘ஆர்?’ என்பது, ஈண்டு இன்மை குறித்து நின்றது.
‘காண்பார் ஆர்?’ என மாற்றுக.
_____________________________________________________________
1. ‘இது கிருஷ்ணாவதாரத்திலேயாய்
இருக்க, ஸ்ரீவாமனாவதாரத்தைச் சொல்லுகிறது,
வரையாதே தீண்டுகை இரண்டு அவதாரத்துக்கும் ஒத்திருக்கையாலே’
என்பது இருபத்து
நாலாயிரப்படி.
2, ஸ்ரீகீதை, 11 :
40
3. ‘சொல்லவிட்டு வரவிட்டு’
என்றது, மஹாமதிகளையுடைத்தான அக்காலம் செல்லவிட்டு,
அறிவு கேடரை உடைத்தான இக்காலம் வந்த
பின்பு என்றபடி.
|