New Page 1
228 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
சொல்லுகிறார். 1தன்
விபூதியினுடைய ரக்ஷணம் ஒருதலையானால் அவன் படும் பாட்டை அநுசந்தித்து மகிழ்ந்தவளாய் அதற்கு உரியவளான
ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்கும், அதனாலே தானும் மகிழ்ந்தவனாய் அணையாநிற்கும் என்றபடி. மால் -
எல்லாரைக்காட்டிலும் உயர்ந்தவனான சர்வேஸ்வரன். செய்கின்ற மால் -அவன் ஏற்றுகிற பிச்சை.
ஆர் காண்பாரே - ஒருவராலே இவ்வளவு என்று அளவிடலாய் இருந்ததோ?
(7)
197
காண்பார்ஆர் எம்ஈசன்
கண்ணனை?என் காணுமாறு?
ஊண்பேசில் எல்லா
உலகும்ஓர் துற்றுஆற்றா;
சேண்பால வீடோ, உயிரோ,
மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான்,
பரந்துளன்ஆம் எங்குமே.
பொ-ரை :
‘எம் ஈசனாகிய கண்ணனை அறிய வல்லவர் யாவர்? காணும் விதந்தான் யாங்ஙனம்? அவனுடைய உணவினைப்
பேசின் எல்லா உலகங்களும் ஒரு கவளத்துக்கும் போதமாட்டா; தங்கியிருக்கும் வீடோ, எல்லா
உலகங்கட்கும் அப்பாற்பட்டது; அவனோ, தன்னை ஒழிந்த மற்றை எல்லாப்பொருள்கட்கும் அந்தரியாமியாய்
இருந்து கொண்டு எல்லாத்திக்குகளிலும் ஒன்றையும் விடாதவனாகி எல்லா இடங்களிலும் பரந்திருக்கிறான்
ஆதலின்.’
வி-கு :
ஊண் - உணவு; உண்ணப்படுவது என்பது பொருள். துற்று - கவளம்; ‘அண்டம் எலாம் உண்டை என்பர் அறியாதார்
ஆங்கு அவைநீ, உண்டருளும் காலத்தில் ஒருதுற்றுக்கு ஆற்றாவால்’ என்றது ஒப்பு நோக்கல் தகும்.
‘எண்’ என்பது ‘ஏண்’ என முதல் நீண்டது; இது எண்ணுப் பெயர். ‘முதனிலைத் தொழிற்பெயர்’
எனலுமாம். சோரான் - முற்றெச்சம்.
_____________________________________________________________
1. மேற்கூறியவற்றை
எல்லாம் கடாட்சித்துத் தழுவுகைக்கு ஏதுவை அருளிச்செய்கிறார், ‘தன்
விபூதியினுடைய ரக்ஷணம்’ என்று
தொடங்கி. ‘மால்’ என்பதற்கு இரு பொருள்: சுவாமி
ஒன்று; வியாமோகம் ஒன்று.
‘அரவாகிச் சுமத்தியால்,
அயில்எயிற்றின் ஏந்துதியால்,
ஒருவாயின் விழுங்குதியால்,
ஓர்அடியால் ஒளித்தியால்,
திருவான நிலமகளை; இஃது
அறிந்தாற் சீறாளோ
மருவாருந் துழாய்அலங்கல்
மணிமார்பின் வைகுவாள்?’
என்ற கம்பநாட்டாழ்வாருடைய
திருவாக்கு இத்திருப்பாசுரத்தை அடியொற்றியது.
(விராதன் வதை. செ. 58)
|