1ந
|
முதல் திருவாய்மொழி - பா. 8 |
23 |
1நீ
உன் ஆற்றாமையைக் காட்டி நலிகின்றாயே! உன் நலிவு நீங்கி வாழ்ந்திடுக,’ என்கிறாள் என்பதாம்.
(7)
118
இருளின் திணிவண்ணம்
மாநீர்க் கழியே! போய்
மருளுற்று இராப்பகல்
துஞ்சிலும்நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த
பெருமானார்
அருளின் பெருநசையால்
ஆழாந்து நொந்தாயே?
பொ - ரை :
‘இருள் செறிந்தாற்போன்று செறிந்த நிறத்தை யுடைய கரிய நீரையுடைய கழியே! மிகவும் அறிவு கெட்டு,
இராப்பகல் முடிவுற்றாலும் நீ தூங்குகிறாய் இல்லை; உருண்டு வருகின்ற சகடத்தின் உருவாக அமைந்த
அசுரனை உதைத்துக் கொன்ற பெருமாள் திருவருள் புரிவான் என்னும் பெருவிருப்பால் ஈடுபட்டு வருந்தினாயோ?’
என்கிறாள்.
வி-கு :
வண்ணம் - நிறம். மா - கருமை; பெருமையுமாம். போதல்
- மிகுதல்; ‘வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள’ என்றார்
தொல்காப்பியனார். துஞ்சுதல் - முடிவுறுதல். நசை - விருப்பம். ஆழாந்து - ‘ஆழ்ந்து’ என்ற
சொல்லின் விகாரம்.
ஈடு : எட்டாம்
பாட்டு. 2அவ்விருளுக்குப் பின்னடைந்து அங்கே இங்கே திரியாநிற்க, இருள் செறிந்தாற்போலே
இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்; அது மடல் எடுப்பாரைப் போன்று கெட்டு ஓடாநிற்றலைக்
கண்டு, ‘பாவியேன், சகடாசுரனை அழித்த அச்செயலிலே நீயும் அகப்பட்டாயே?’ என்கிறாள்.
இருளின் திணி வண்ணம்
மா நீர்க் கழியே - ‘இருளினது வயிரம் போன்று இருக்கின்ற நிறத்தையுடைத்தாய்ப் பெரிய நீரை
_____________________________________________________________
1. ‘வேற்றோர் வகையிற்கொடிதாய்
மாற்றாண்மை நிற்றி’ என்பதற்குக் கருத்துரையாக, ‘நீ
உன் ஆற்றாமையைக் காட்டி நலிகின்றாயே?’
என்கிறார். ‘உன் ஆற்றாமையைக் காட்டிப்
பகைவர்கள் நலியும் வகையைக் காட்டிலும் அதிகமாக நலிகின்றாயே?’
என்பது பொருள்.
‘நீ நடுவே’ என்பதற்கு, நாரை முதலானவற்றின் நடுவே என்பது பொருள். அதாவது,
‘நாரை முதலானவைகள் தங்கள் வியசனத்தைக் காட்டி என்னை நலியா நிற்க, நீயும்
அவை போன்று உன்னுடைய
துக்கத்தைக் காட்டி நலிகின்றாயே!’ என்றபடி,
2. இருளுக்குப் பின், இப்பாசுரத்தின்
கழியைக் கூறுதற்குரிய காரணத்தை விளக்குகிறார்
‘அவ்விருளுக்குப் பின்னடைந்து’ என்று தொடங்கி.
‘மடலெடுத்தல்’ என்பது,
அகப்பொருள் துறைகளுள் ஒன்று.
|