முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

களும

230

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

களும் வியாபித்துவிடாதே நிற்கும் என்னுதல். பரந்து உளன் ஆம் எங்கும் - 1இப்படி வியாபிக்குமிடத்தில் ஒரு குறையுண்டாய் இருக்கை அன்றியே, குறை அற வியாபித்திருக்கும். ஆன பின்னர், ‘எங்கும் பரந்திருக்கும் பொருளை, பரந்திருக்கப்பட்ட பொருள்களிலே ஒன்று அளவிட்டுக் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்றபடி.

(8)

198

        ‘எங்கும் உளன்கண்ணன்’ என்றமக னைக்காய்ந்து
        ‘இங்குஇல்லை யால்’என்று இரணியன் தூண்புடைப்ப
        அங்குஅப்  பொழுதே அவன்வீயத் தோன்றியஎன்
        சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே?

    பொ-ரை : ‘கண்ணன் எல்லா இடத்திலும் இருக்கிறான்’ என்று கூறிய மகனாகிய பிரஹ்லாதனைத் தந்தையாகிய இரணியன், ‘நீ கூறுகிற கண்ணன் இவ்விடத்தில் இல்லாதவனேயாவன்,’ என்று தூணை அடிக்க, அத்தூணில் அப்பொழுதே அவ்விரணியன் மாயும்படியாகத் தோன்றிய என் சிங்கப்பிரானுடைய பெருமை ஆராய்தற்குரிய தன்மையதோ?’ என்கிறார்.

    வி-கு : மேல் ‘ஏண்பாலும் சோரான்’ என்றார்; அதனை விரிக்கிறார் இப்பாசுரத்தில். ‘உளன், இல்லை’ என்பன, பண்பின் அடியாகப் பிறந்த குறிப்பு முற்றுகள். ‘காய்ந்து புடைப்பத் தோன்றிய சிங்கப்பிரான்’ என்க.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 2‘நீர் சொன்னது பொருத்தம் அற்றதாய் இருந்ததே! ‘ஒரு பொருளே அநேக பொருள்களில் குறைவு அறப் பரந்து இருக்கும்’ என்றால் இது கூடுமோ?’ என்ன, ‘கெடுவீர்காள்! அவன் சர்வ கதத்வத்தை இசையாத இரணியன் பட்டது படாதே கொள்ளுங்கோள்’ என்கிறார்.

_____________________________________________________________

1. ‘ஏண்பால் ‘என்று கூறிப் பின்னும் ‘எங்கும்’ என்று கூறியதனால் போந்த பொருளை
  ‘இப்படி வியாபிக்குமிடத்தில்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். வியாபித்தல் -
  பரந்திருத்தல்.

2. மேற்பாசுரத்தில் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையைக் கூறிய பின்னர், ‘இரணியனைக்
  கொன்ற நரசிங்கப்பெருமானுடைய பெருமை அளவிட முடியாதது’ என்று
  சொல்லுகின்றவருடைய கருத்தை வினா விடை மூலமாக விளக்குகிறார், ‘நீர் சொன்னது’
  என்று தொடங்கி. சர்வ கதத்வம் - எங்கும் பரந்து நிறைந்திருக்கும் தன்மை.

  இங்கு, பரிபாடல் 4-ஆம் பாடலின் 10-ஆம் அடி முதல் 21-ஆம் அடி முடிய உள்ள
  பகுதியையும், அதன் உரையையும் படித்து உணர்தல் தகும். கம்பராமாயணம்
  இரணியன்வதைப் படலத்தால் இச்சரிதத்தின் விரிவை உணரலாகும்.