அ
232 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
அடித்துக் காட்டினான்.
1‘அளந்து இட்ட தூணை அவன் தட்ட’- முன்பே நரசிங்கத்தை வைத்து நட்ட தூண்’ என்ன
ஒண்ணாதே? தானே தனக்குப் பொருந்தப் பார்த்து நறுக்கி நட்டதூண் ஆகையாலே ‘அளந்திட்ட தூணை’
என்கிறார். வேறே சிலர் தட்டினார் ஆகில் ‘கையிலே அடக்கிக் கொண்டு வந்து தூணிலே
பாய்ச்சினார்கள்’ என்னவுமாமன்றோ? தானே ஆயிற்றுத் தட்டினானும் என்பார், ‘அவன் தட்ட’
என்கிறார். அங்கு அப்பொழுதே - அத் தூணிலே, அடித்த இடத்திலே. ‘அவன் சூளுறவு செய்த அச்சமயத்திலேயே’
எனலுமாம். அவன் வீயத்தோன்றிய -‘தன் தோற்றரவிலே அவன் பிணமாம்படி தோன்றின; அதிர்த்துக்
கொண்டு புறப்பட்டபோதை அட்டஹாஸமும், நாமடிக்கொண்ட உதடும், நெற்றியது கண்ணும் உச்சியது
புருவமுமாய்க்கொண்டு தோன்றின போது பொசுக்கின பன்றி போல உருகினான் ஆயிற்றுப் பொன்னன்
ஆகையாலே’ என்றபடி. என் சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே -அடியார் கூட்டத்துக்காக
நரசிம்ஹமாய் உபகரித்தவனுடைய பரத்துவம் இன்று சிலரால் ஆராயும்படி இருந்ததோ?
(9)
199
சீர்மைகொள்
வீடு சுவர்க்கம் நரகுஈறா
ஈர்மைகொள் தேவர்
நடுவாமற்று எப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய்ப்
பரந்து தனிநின்ற
கார்முகில்போல் வண்ணன்என்
கண்ணனைநான்
கண்டேனே.
பொ-ரை :
சிறப்பினைக் கொண்டுள்ள பரமபதம் சுவர்க்கம் நரகம் முடிவாக, அன்பினைக் கொண்டுள்ள தேவர்கள்
நடுவாக, மற்றும் உண்டான எல்லாப்பொருள்கட்கும் வேராகி முதலாகி வித்து ஆகிப் பரந்து தனித்து
நின்ற கார்காலத்து மேகத்தைப் போன்ற வண்ணத்தை உடையவனான என் கண்ணபிரானை நான் கண்டேன்.
வி-கு :
வீடு முதலானவற்றை முடிவாகவும், தேவர்களை நடுவாகவும் ஓதியதனால் ‘எப்பொருட்கும்’ என்றதனை முதலாகக்
கொள்க. நல்வினை தீவினைகளைச் செய்பவை உயிர்கள் ஆதலின், அவற்றை முதலாகவும், அக்கருமங்கட்குப்
பலன்களைக் கொடுப்பவர்கள் தேவர்கள் ஆதலின், அவர்களை நடுவாகவும், அப்பலன்களை அனுபவிக்கும்
இடங்கள் வீடு சுவர்க்கம் நரகங்கள் ஆதலின், அவற்றை ஈறாகவும் ஓதினார்
_____________________________________________________________
1. பெரியாழ்வார் திருமொழி,
1. 6 : 9.
|