ஈ
எட்டாந்திருவாய்மொழி - பா. 11 |
233 |
ஈடு :
பத்தாம் பாட்டு. 1‘இவர்களை விடீர், நாம்
முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாதே அவனை அனுபவிக்கப் பெற்றோமே!’ என்று தமது இலாப
அநுசந்தானத்தாலே மகிழ்ந்தவர் ஆகிறார்.
சீர்மை கொள் வீடு
சுவர்க்கம் நரகு ஈறு ஆக ஈர்மை கொள்தேவர் நடுவாக மற்று எப்பொருட்கும் - எல்லா வகையாலும் நன்றான
பரமபதம் அளவுக்குட்பட்ட இன்பத்தையுடைய சுவர்க்கம் கலப்பு அற்ற துக்கமேயான நரகம் இவை
முடிவாக, ஈரப்பாடு உடையவர்களான தேவர்கள் நடுவாக, மற்றும் உண்டான விலங்கு முதலானவற்றிற்கும்.
வேர் முதலாய் வித்தாய் -2மூன்றுவித காரணமும் தானேயாய். பரந்து -3‘உயிர்களைப்
படைத்து அவற்றுள் அநுப்பிரவேசித்தார்; பிரவேசித்து, அறிவுடைப்பொருள், அறிவில் பொருள்கள்
ஆனார்’ என்கிறபடியே, முந்துற இவற்றை அடைய உண்டாக்கி, பின்னர்ப் பொருளாதல் பெயரடைதல்களுக்காக
அவற்றுள் அநுப்பிரவேசித்து, இப்படி உலகமே உருவமாய் நின்று. தனி நின்ற கார்முகில்போல் வண்ணன்
என் கண்ணனை நான் கண்டேன்-‘இப்படி, உலகமே உருவமாய் நின்ற அளவே அன்றி, தன்னுடைய சிறப்புத்
தோன்றும்படி ஸ்ரீவைகுண்டத்திலே மழை பெய்யும் மேகம் போலே இருக்கிற அழகிய திருமேனியையுடையனாய்
இருந்தும், கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்குக் கையாள் ஆனவனை நான் முந்துற முன்னம் கண்டு
அனுபவிக்கப் பெற்றேன்’ என்கிறார்.
200
கண்தலங்கள் செய்ய
கருமேனி அம்மானை
வண்டுஅலம்பும்
சோலை வழுதி வளநாடன்
பண்தலையில்
சொன்னதமிழ் ஆயிரத்துஇப் பத்தும்வல்லார்
விண்தலையில்
வீற்றிருந்து ஆள்வார்எம் மாவீடே.
____________________________________________________________
1. சம்சாரிகளுக்கு உபதேசித்த இடத்தில் அவர்கள் திருந்தாமையாலே
‘இவர்களை விடீர்’
என்கிறார். ‘கண்ணனை நான் கண்டேனே’ என்றதனை நோக்கி, ‘நாம் முந்துற
முன்னம்’
என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
2. மூன்று விதமான காரணங்கள்:
முதல் துணை நிமித்த காரணங்கள். வேர் -
துணைக்காரணம்; முதல் - நிமித்தகாரணம்; வித்து - முதற்
காரணம்.
ஞானசத்தியாதிகளோடு கூடிய வேஷத்தால் துணைக்காரணமும், சங்கல்பத்தோடு கூடிய
வேஷத்தால்
நிமித்தகாரணமும், சூஷ்ம சித்து அசித்துகளோடு கூடின தன்மையால்
முதற்காரணமும் கொள்க.
3. தைத்திரீய ஆனந். :
6.
|