முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

24

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

யுமுடைத்தான கழியே! 1‘வெளிறான இருள் அன்றி, இருளின் புற இதழை வாங்கி வயிரத்தைச் சேரப் பிடித்தாற்போன்றிருக்கிறது இருள்’ என்பாள். ‘இருளின் திணி வண்ணம்’ என்கிறாள். திணி - வயிரம். இனி, 2‘அச்சமான இருள்’ என்று பொருள் கூறலுமாம். போய் மருளுற்று - மிகவும் அறிவு கெட்டு. 3‘மயர்வற மதிநலம் அருளப் பெற்றாருடைய அறிவு கேட்டிற்கும் அப்பாற்பட்டதாக இருக்கின்றதே அதனுடைய அறிவுகேடு!’ என்பாள், ‘போய் மருளுற்று’ என்கிறாள்.

    இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால் - காலத்துக்கு ஓர் எல்லை காணிலும் உன் ஆற்றாமைக்கு ஓர் எல்லை காண்கின்றிலோம். உருளும் சகடம் உதைத்த பெருமானார் - காவலாக வைத்த சகடந் தானே அசுர ஆவேசத்தாலே ஊர்ந்துவர, தாயுங்கூட உதவாத சமயத்திலே முலை வரவு தாழ்த்த காரணத்தால் சீறி நிமிர்த்த திருவடிகளால் முடித்து உலகத்துக்குத் தலைவனாகிய தன்னைத் தந்த உபகாரகன். அருளின் பெருநசையால் - ‘அத்தகைய உபகாரகன் காதலிக்கு உதவானோ?’ என்னும் ஆசையாலே. அருளின் கனத்துக்குத் தக்கபடியே நசையின் கனமும் இருக்குமாதலின், ‘உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெருநசை’ என்கிறாள். ஆழாந்து நொந்தாயே - ‘தரைப்பட்டு நோவுபட்டாயே!’ என்கிறாள்.                                    

(8)

119

        நொந்தாராக் காதல்நோய் மெல்லாவி உள்உலர்த்த
        நந்தா விளக்கமே! நீயும் அளியத்தாய்!
        செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
        அந்தாமத் தண்துழாய் ஆசையால் வேவாயே?

    பொ - ரை : ‘கெடாத விளக்கே! ஒருகால் வருந்த, அதனுடன் முடிந்தது என்பது இன்றி, அமையாது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்லுகின்ற காதல் நோயானது, மிருதுவான உயிரை உள்ளே உள்ள பசையெல்லாம் அறும்படி உலர்த்த, உலர்த்திய காரணத்தால் நீயும் இரங்கத் தக்கதாக இருக்கின்றாய்; செந்தாமரை

____________________________________________________________

1. வெளிறு - அசாரம், சாரமின்மை

2. அச்சம் - வேறொன்றன் கலப்பில்லாமை,

3. இத்திருப்பதிகத்தில் இரண்டாம் திருப்பாசுரத்தில் ‘நீயும்’ என்ற சொல்லுக்கு எழுதிய
  பொருளை ஈண்டு நினைவு கூர்க.