க
ஒன்பதாந்திருவாய்மொழி
- பா. 1 |
243 |
காணும் என்னுடைய அஸ்மிதை’
என்றார் இளையபெருமாள். இத்தகைய பராதந்திரியத்தை ஆயிற்று இவர் ஆசைப்படுகிறது.
‘இதுதான் ஒருவர்
விரும்புவதும் அன்று; விரும்புவார் இன்மை யான் நான் கொடுத்துப் போருமதுவும் அன்று; அவ்வழி புல்
எழுந்து போயிற்றுக் காணும்’ என்று இறைவன் அநாதரித்திருக்க, ‘புருஷன் அர்த்திக்க வருமது அன்றோ
புருஷார்த்தமாவது? இப்பேறு இத்தனையும் நான் பெற்றேனாக வேண்டும்’ என்று இவர் விரும்ப, 1அவனுந்
தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக்கட்டுகிறார்.
201
எம்மா வீட்டுத்
திறமும் செப்பம்;நின்
செம்மா பாதபற்
புத்தலை சேர்த்து;ஒல்லை
கைம்மாத் துன்பம்
கடிந்த பிரானே!
அம்மா! அடியேன்
வேண்டுவது இஃதே2.
பொ-ரை :
கையையுடைய யானையினது துன்பத்தை நீக்கிய உபகாரகனே! ஸ்வாமியே! எத்தகைய பெரிய மோக்ஷத்தின்
தன்மையைப் பற்றியும் பேசோம்; நினது சிவந்த பெருமை பொருந்திய திருவடித் தாமைரைகளை என்
தலையின்மீது விரைவில் சேர்க்கவேண்டும்; அடியேன் விரும்புவது இப்பேறேயாகும்.
வி-கு : ‘எம்மா’ என்பதனை, எ-மா என்றும், எம்-மா என்றும் இருவகையாகவும் பிரித்தல் தகும். ‘ஒல்லை’
என்பதனை முன்னும் பின்னும் கூட்டி இடைநிலைத் தீவகமாகப் பொருள் கொள்க. செப்பம் - தனித்தன்மைப்
பன்மை. ‘பத்மம்’ என்ற சொல், ‘பற்பம்’ எனத் திரிந்தது.
_____________________________________________________________
‘பரவாநஸ்மி’ என்ற தலைப்பையுடைய
சுலோகம் முழுதும் வருமாறு; -
‘பரவாநஸ்மி காகுத்ஸ்த
த்வயி வர்ஷதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேசே
கிரியதாமிதி மாம் வத.’
‘ககுத்ஸ்த வம்சத்தில்
பிறந்தவரே! தேவரீர் பல வருஷங்களாக இருக்கும் போதும்
நான் பரதந்திரனாகவே இருக்கிறேன்; தேவரீரே
மனோகரமான ஓர் இடத்தைப் பார்த்து,
‘இந்த இடத்தில் பர்ணசாலை கட்டுக’ என்று என்னை நியமித்தருளவேண்டும்.
1. ’விடலில் சக்கரத் தண்ணலை’
என்னும் ஈற்றுப் பாசுரத்தை நோக்கி, ‘அவனும்
தலைதுலுக்கப் பெற்றாராய்’
என்கிறார்.
2. ‘வேண்டுவது ஈதே’ என்பது
முன் உள்ள பாடம்.
|