முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

அதற

246

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

அதற்குச் சரீர நாசம்; எனக்கு ஆத்தும நாசம்; அங்கு யானையின் காலை முதலை பற்றியது; இங்கு என்னுடைய நெஞ்சை அன்றோ அருவித் தின்றிடுகிறது? ஆதலால், அதற்கும் இதற்கும் உள்ள வாசி பாராய். கஜேந்திராழ்வானுடைய துக்கத்தைப் போக்கின அதுவும் தமக்குப் போக்கியது என்று இருக்கின்றார் ஆதலின் ‘பிரானே’ என்கிறார். ‘அதற்கு உதவினமை உண்டு; உமக்கு என்?’ என்ன, அம்மா -‘அதற்கும் எனக்கும் ஒவ்வாதோ தேவரீருடைய சம்பந்தம்? நீர் சுவாமி அன்றோ?’ ‘நீர் யார்?’ என்ன, அடியேன்-நான் அடியவன். ‘நன்று; இவருடைய சொரூபத்தையும் பற்றித் ‘தவிர ஒண்ணாது’ என்று விரும்புகிறீரோ?’ என்ன, வேண்டுவது - வேண்டிப் பெறத்தக்கது. ‘இதுவாகில் வேண்டுவது, இது செய்கிறோம்; இதுவும் இன்னம் எதுவும் வேண்டும்?’ என்றான். இஃதே - 1‘நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து என்ற இதுவே’ என்கிறார்.          

(1)

202

        2இஃதே யான்உன்னைக் கொள்வதுஎஞ் ஞான்றும்;என்
        மய்தோய் சோதி மணிவண்ண! எந்தாய்!
        எய்தா நின்கழல் யான்எய்த, ஞானக்
        கய்தா; காலக் கழிவுசெய் யேலே.

_____________________________________________________________

1. ‘நின் செம் மா பாதபற்புத் தலைசேர்த்து’ என்கையாலே அடிமைத்
  தன்மையேபுருஷார்த்தம் என்பதும், சொரூபத்தைப் பற்ற விக்கிரஹமே உத்தேஸ்யம்
  என்பதும் தோற்றுகின்றன. 

2. ‘இஃதே’ என்ற இடத்து ஆய்தம் யகரத்திற்கு எதுகையாக வந்தது.

  ‘செய்தான் இருவினையின் பயத்தைச் சேரும் சென்றுஎன்றி;
  எய்தான் அதன்பயத்தைப் பிறனே துய்த்தல் இயல்பு என்றி;
  கொய்தாமந் தாழ்ந்துஒசிந்த குளிர்பூம் பிண்டிக் கோமானே!
  இஃதேநின்சொல் இயல்பென்றா லடியேன் நின்னைத் தொழுதேனே.’             

(சிந்தா. 1418)

  ‘அஃதே அடிகளும் உளரோ என்றாற்கு அருளுமாறு
  இஃதா இருந்தவாறு என்றார்க்கு என்னைப் பெறவல்லார்க்கு
  எய்தா இடருளவே யெங்கெங் கென்றத் திசைநோக்கி
  வெய்தா வடிதொழுது வேந்தன் கோயிற் கெழுந்தானே.’                

(சிந்தா. 1884)

  என்ற இடங்களில் யகரமும் ஆய்தமும் தம்முள் ஒத்து எதுகையாய் வந்துள்ளமை
  அறியலாகும்.

      ‘ஈதே’ என்பது, முன் உள்ள பாடம். இப்பாடம் பொருத்தம் இன்று. ‘இரண்டாம்,
  வழுவா எழுத்தொன்றின் மாதே எதுகை’ என்பது இலக்கணம்.