முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

248

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

‘இப்படிக் கற்பித்தார் யாவர்? மற்றும் உளரோ? தேவர் வடிவழகே அன்றோ!’ என்கிறார் மேல்: என் மை தோய் சோதி மணிவண்ண எந்தாய் - மை தோய்ந்துள்ள ஒளியை உடைத்தான மணியினுடைய நிறம் போன்ற திருநிறத்தைக் காட்டி என்னை உனக்கே உரியவனாக்கி உன் சேஷித்துவத்தை அறிவித்தவனே!

    ‘அழகிது, உமக்குச் செய்யவேண்டுவதுதான் என்?’ என்ன, எய்தா நின் கழல் யான் எய்த - தன் முயற்சியால் ஒருவர்க்கும் அடைய ஒண்ணாத திருவடிகளை ‘உன்னாலே பேறு’ என்று இருக்கிற நான் அடையும்படி செய். ‘அது, மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அன்றே பெற்றிலீரோ?’ என்ன, ஞானக் கைதா - இது நினைத்திருக்கும் அளவு போதாது; அது நான் ‘பெற்றேன்’ என்று 1தெளியும்படி செய்யவேண்டும்.  அமிழ்ந்தினார்க்குக் கைகொடுத்தாற்போன்று இருக்கையாலே ஞான லாபத்தை ‘ஞானமான கை’ என்று உருவகப்படுத்துகிறார். இங்கே, ‘ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால், எடுக்கமவர்களுக்கும் எளிதாய், ஏறுமவனுக்கும் எளிதாய் இருக்குமன்றோ? அப்படியேயாகிறது’ என்று 2எம்பார்க்கு ஆண்டான் அருளிச்செய்த வார்த்தையை நினைப்பது. இனி, 3’எய்தா நின் கழல் யான் எய்த’ என்று நீர் கூறுவது, பரபத்தி பரஞான பரமபத்திகளையுடையார் பெறும் பேறு அன்றோ?’ என்ன, ஞானக் கை தா -‘அவற்றையும் தேவரீரே பிறப்பித்து, தேவர் திருவடிகளைப் பெறும்படி செய்யவேண்டும்’ என்கிறார் எனலுமாம். ‘அப்படியே செய்கிறோம்’ என்ன, ‘காலக் கழிவு செய்யேல்’ என்கிறார்; அதாவது, ‘ஒல்லை என்றதுதானே அன்றோ எனக்கு எப்போதும் வார்த்தை’ என்கிறார் என்றபடி.

(2)

_____________________________________________________________

1. ‘தெளியும்படி செய்யவேண்டும்’ என்றது, ‘மானஸ சர்க்ஷாத்காரம் போராது;
  பிரத்யக்ஷமாம்படி செய்யவேண்டும்’ என்றபடி.

2. ஞானத்தைக் கையாகச் சொன்னதற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார். ‘ஒரு கிணற்றிலே’ என்று
  தொடங்கி. எம்பார்; ஆண்டான் திருவடிகளிலே ஆஸ்ரயித்த ஒருவரை அறியாமல் பகவச்
  சம்பந்தத்தைப் பண்ணி, ஆண்டான் திருவடிகளில் ஆஸ்ரயித்தவர் என்று அறிந்த பின்
  பயப்பட. அப்போது ஆண்டான் அருளிச்செய்த வார்த்தை என்றபடி.

3. ’ஞானக் கை தா’ என்பதற்கு இரு பொருள் அருளிச் செய்கிறார்; ஒன்று, ‘நான்
  பெற்றேன் என்று தெளியும்படி செய்ய வேண்டும்’ என்று முன்னர்க்கூறியது. மற்றொன்று,
  ‘பரபத்தி பரஞான’ என்று தொடங்கி இங்கு அருளிச்செய்வது. முன்னைய பொருளில்,
  ‘ஞானம்’ பிரத்யக்ஷரூப ஞானம்; இரண்டாவது பொருளில், பத்திரூப ஞானம்.
  இவ்விருபொருள்களினும் சங்கதி பேதம் ஒழிய அர்த்த பேதம் இல்லை.