203
ஒன்பதாந்திருவாய்மொழி
- பா. 3 |
249 |
203
செய்யேல் தீவினை
என்றுஅருள் செய்யும்என்
கய்யார் சக்கரக்
கண்ண பிரானே!
அய்யார் கண்டம்
அடைக்கிலும் நின்கழல்
எய்யாது ஏத்த அருள்செய்
எனக்கே.
பொ-ரை :
‘கொடிய பாவங்களைச் செய்யாதே’ என்று திரு அருளைச் செய்கின்ற, கையிலே தரித்திருக்கின்ற சக்கரத்தையுடைய
என் கண்ணபிரானே! கோழையானது கழுத்தை அடைக்கின்ற அக்காலத்திலும் நின் திருவடிகளை மறவாமல்
ஏத்தும்படி எனக்கு அருள் செய்க.
வி-கு :
கய் -கை, ‘அய் - ஐ’ எனபன. ஐகாரத்திற்கு அகரயகரங்கள் எதுகை நோக்கிப் போலியாய் வந்தன;
‘அகரத் திம்பர் யகரப்புள்ளியும், ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’ என்றார் ஆசிரியர்
தொல்காப்பியனார் ( தொல். எழுத்) ஐ-கோழை. ‘ஆர்’ விகுதி இழிவின் கண் வந்தது. அன்றி,
‘ஆர் ஐ’ என்று மாற்றிப் பொருள் கோடலுமாம். எய்த்தல் -இளைத்தல்; எய்யாது - இளையாமல்.
ஈடு :
மூன்றாம் பாட்டு. 1இப்பாசுரத்தில்
வாயினாற்பெறும் பேற்றை விரும்புகிறார்.
‘செய்யேல் தீவினை’
என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரானே -2‘கையும் திருவாழியும்
பொருந்தி இருக்கிற இருப்புக் கண்டாயே, நம் பவ்யதை கண்டாயே; நம்மை நுகர்தல் அழகியதோ?
சிற்றின்பங்களிலே ஈடுபாடு உள்ளவனாய்க் கேட்டினை அடைதல் அழகியதோ?’ என்று கையில் திருவாழியையும்
பவ்யதையையும் காட்டி இவருடைய தீவினைகளைத் தவிர்த்தான் என்றது, ‘சாஸ்திரங்களை உபதேசித்து
அன்று’ என்றபடி. ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த - செறிந்த கோழையானது
கண்டத்தை அடைக்கிலும், உன்னுடைய எல்லையற்ற இனிமைப் பொருளான திருவடிகளை நான் மறவாமல் ஏத்த
_____________________________________________________________
1. ஏத்த அருள்செய் எனக்கே’
என்றதனைக் கடாட்சித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘கையார் சக்கரம்’ என்றதனை
நோக்கிக் ‘கையும் திருவாழியும்‘ என்ற வாக்கியத்தை
அருளிச்செய்கிறார். ‘கண்ணபிரானே’ என்றதனை
நோக்கி, ‘நம் பவ்யதை கண்டாயே’
என்கிறார். ‘சிற்றின்பங்களிலே’ என்றது, ‘தீவினை’ என்றதன்
பொருள்.
|