New Page 1
|
முதல் திருவாய்மொழி - பா. 9 |
25 |
போன்ற அகன்ற திருக்கண்களையும்,
சிவந்த கனி போன்ற திருவாயினையுமுடைய எம்பெருமானுடைய அழகிய திருத்துழாய் மாலையில் வைத்த
ஆசையால் வேகின்றாயோ?’ என்கிறார்.
வி - கு :
நொந்து - செயவெனச்சத் திரிபு; ‘நோவ’ என்பது பொருள். ஆரா, நந்தா - ஈறு கெட்ட எதிர்மறைப்
பெயரெச்சங்கள். அளியத்தாய், ஒரு சொல். ‘அந்தமிலா அன்புஎன்மேல் வைத்தாய் அளியத்தாய்’
(கம்பரா. இரணியன் வதை. 136) என்றார் கம்பநாடர்.
ஈடு : ஒன்பதாம்
பாட்டு. 1அக்கழிக்கு ஒரு கரை காணமாட்டாமல் மீண்டு வந்து படுக்கையிலே விழுந்தாள்;
அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்; அது ‘உடம்பில் கை வைக்க ஒண்ணாதபடி விரஹசுரம் பற்றி எரியாநின்றது’
என்று அதனைப் பார்த்து, ‘நீயும் நோவுபட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.
நொந்து ஆராக் காதல்
நோய் மெல் ஆவி உள் உலர்த்த - ‘நோவ’ என்று புக்கால், நொந்து தலைக்கட்டக் கூடியதல்லாமல்
இருக்கிற காதல் நோயானது, மிருதுவாயிருக்கிற ஆத்துமாவைக் குருத்துவற்றாக உலர்த்த, தொட்டார்
மேல் தோஷமாம்படி காற்றுப் படவும் பொறாதிருக்கின்றதாலின், ‘மெல் ஆவி’ என்கிறாள்.
ஆத்துமாவிற்கு மென்மை, பகவானுடைய குணங்களை அநுபவித்து நைந்திருத்தல். நந்தா விளக்கமே - கெடாத
விளக்கே! ‘ஒன்றன் பின் ஒன்று மாறிக்கொண்டே அழிகின்ற சுவாலையை ‘நந்தா விளக்கே’ என்றது
என்னை?’ எனின், தான் மயக்கம் கொண்டவள் ஆதலின், மிக நுண்ணியதாக ஆய்ந்து அறியக்கூடிய
சுவாலையினுடைய வேறுபாட்டினை இருந்து பார்க்கின்றாள் அல்லள்; சுவாலையானது கெடுதல் இன்றித் தொடர்ந்து
வந்துகொண்டே இருப்பது போலத் தோற்றுதலின், அதனைப் பார்த்து, ‘நந்தா விளக்கே’ என்கிறாள்.
அளியத்தாய் நீயும் - நாட்டுக்குக் 2கண் காட்டியான அருமந்த நீயும். அளியத்தாய்
வேவாயே - பிறர்க்கு உதவி செய்கிற உடம்பிலே உனக்கு நோவு வருவதே?
செந்தாமரைத் தடம்
கண் - முகத்தைப் பார்த்துக் குளிர நோக்கின போதைத் திருக்கண்களில் செவ்வி சொல்லுகிறது.
செம் கனி வாய் - இன்சொல் சொல்லுகிற போதைத் திரு அதரத்தில் பழுப்பைச் சொல்லுகிறது. எம்பெருமான்
- நோக்காலும் புன்சிரிப்பாலும் என்னைத்
_____________________________________________________________
1. மேல் திருப்பாசுரத்திற்கும்
இதற்கும் பொருள் இயைபு அருளிச் செய்கிறார் ‘அக்கழிக்கு
ஒரு கரை காணமாட்டாமல்’ என்று தொடங்கி.
2. கண் காட்டியான - கண்களுக்கு
விஷயங்களைக் காட்டுகிற.
|