முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

வல

250

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

வல்லனாம்படி பண்ணியருள வேண்டும். 1‘துன்பத்தை நீக்க வேண்டும்’ என்கிறேன். அல்லேன்; 2‘துன்பம் வந்த காலத்திலும், உன்னை அடைந்திருக்கிற என்னுடைய எண்ணமானது கேட்டை அடையாமல் இருந்ததே ஆனால், அதைக்கொண்டு எப்பொழுதும் பேறு பெற்றவனாக இருக்கிறேன்’ என்கிறபடியே, ‘ஏதேனும் 3உத்கிரமண சமயத்திலும் உன் திருவடிகளை நான் இளையாதே ஏத்தும்படி செய்தருளவேண்டும்’ என்றபடி. இனி, ‘ஐயார் கண்டம் அடைக்கிலும்’ என்பதற்கு, 4‘உக்கிரமண தசையைப் பார்த்துக் கோழைப் பையலார் வந்து மிடறு பிடிக்கினும்’ என்று பொருள் கூறலுமாம். ‘அது, ஒரு நல்வினையின் பலம் அன்றோ?’ என்ன, ‘அருள் செய்’ என்கிறார், ‘இவன் பெற்றிடுவான்’ என்று இரங்கியருளவேண்டும் என்கிறார் என்றபடி. ‘ஆயின், இது எல்லார்க்கும் செய்யவேண்டி வாராதோ?’ என்ன, ‘எனக்கே’ என்கிறார்; ‘உன் முன்னிலையில் வேண்டிக்கொள்ளுகின்ற என் ஒருவனுக்குச் செய்தருள வேண்டும்’ என்றபடி.

(3)

204

        ‘மனக்கே ஆட்செய்எக் காலத்தும்’ என்று,என்
        மனக்கே வந்துஇடை வீடுஇன்றி மன்னித்
        தனக்கே யாக எனைக்கொள்ளும் ஈதே;
        எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.

    பொ-ரை : ‘எல்லாக் காலத்திலும் எனக்கே அடிமை செய்வாய்,’ என்று என் மனத்தின்கண் வந்து பிரிதலின்றி நிலை பெற்று நின்று, தனக்கே நான் உரியவனாம்படி என்னை ஏற்றுக்கொள்ளுமிதுவே, தனக்குத் தகுதியாகக் கிருஷ்ணனிடத்தில் யான் விரும்பிக் கொள்ளுகின்ற பயனாகும்.

    வி-கு : ‘எனக்கே தனக்கே’ என்பனவற்றிலுள்ள ஏகாரங்கள்; பிரிநிலைப்பொருளில் வந்தன. ‘மனக்கு’ என்பது ‘மாடக்கு’ என்பது போன்ற விகாரம். ‘என்று, வந்து, மன்னி, கொள்ளும் ஈதே சிறப்பு’ என முடிக்க. ‘கொள்சிறப்பு’ - வினைத்தொகை. கண்ணனை-வேற்றுமை மயக்கம்; ‘கண்ணனிடத்தில்’ என்பது பொருள்.

_____________________________________________________________

1. ’ஐயார் கண்ட மடைக்கிலும்’ என்பதற்கு பாவம், ‘துன்பத்தை நீக்க வேண்டும்’ என்று
  தொடங்கும் வாக்கியம்.

2. ஜிதந்தா ஸ்தோத்திரம்.

3. உத்கிரமணசமயம் - உயிர் வெளிக்கிளம்புகிற சமயம்: இறக்கும் சமயம் என்றபடி.

4. ‘உத்கிரமணதசையைப் பார்த்து’ என்று தொடங்கி, ரசோக்தியாகப் பொருள்
  அருளிச்செய்கிறார்.