ஈ
ஒன்பதாந்திருவாய்மொழி
- பா. 4 |
251 |
ஈடு :
நான்காம் பாட்டு. 1இத்திருவாய்மொழியில், இவர் அறுதியிட்ட பிராப்பியமாவது,
2மலர்மாலை, சந்தனம் முதலியவைகளைப் போன்று ‘தனக்கேயாக என்னைக்கொள்ளும் ஈதே’
என்பதே அன்றோ? அதனை இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார். 3‘சர்வேஸ்வரன் மூன்று
விதமான சேதநரையும் சொரூபத்திற்குத் தகுதியாக அடிமை கொள்ளுகின்றான்; நாமும் அப்படியே சொரூபத்திற்குத்
தகுதியான பேறு பெறுவோமே!’ என்று அருளிச்செய்கிறார் என்று இவ்விடத்திலே எம்பார்
அருளிச்செய்வர். 4‘முத்தரும் நித்தியரும், தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பிப்பார்கள்;
பத்தர், தாங்கள் ஆனந்தியாமல் அவனை ஆனந்திப்பிப்பர்; ‘இன்புறும் இவ்விளையாட்டு உடையான்’
அன்றே? மயர்வு அற மதி நலம் அருளப் பெற்றவர்கள், ‘இறைவன் திருவுள்ளமானபடி செய்கிறான்’ என்று
_____________________________________________________________
1. இத்திருவாய்மொழிக்கு
நிதானம் இப்பாசுரம் என்னுமிடம் தோன்ற அருளிச்செய்கிறார்.
‘இத்திருவாய்மொழியில்’ என்று
தொடங்கி.
2. ‘பலவுறு நறுஞ்சாந்தம்
யடுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும்
மலைக்கவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங்
கனையளே;
‘சீர்கெழு வெண்முத்தம்
அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம்
என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங்
கனையளே;
‘ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்
கல்லதை
யாழுளே பிறப்பினும்
யாழ்க்குஅவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங்
கனையளே.’
(கலித். 9)
என்னும் தாழிசைகள் ஈண்டு
ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.
3. ‘சர்வேஸ்வரன் மூன்று
வகைப்பட்ட சேதனரையும் தங்களுக்கு அனுபவத்தின் பயன்
இன்றிக்கே தனக்கே உறுப்பாம்படி ஸ்வரூப
அநுரூபமாக அடிமை கொள்ளாநின்றான்
அன்றோ? நாமும் அப்படியே ஸ்வரூப அநுரூபமான பேறு பெறுவோமே!’
என்று
அருளிச்செய்கிறார் என்றபடி.
4. மூன்று வகைப்பட்ட
சேதனரும் அத்தலைக்கு உறுப்பாம் படியை விரிக்கிறார், ‘முத்தரும்
நித்தியரும்’ என்று தொடங்கி.
முத்தரும் நித்தியரும் ‘அஹமந்நம் அஹமந்நம்’ என்று
அவனை ஆனந்திப்பித்து, அவன் உகந்த அவ்வழியாலே
‘அஹமந்நாத’ என்று
தாங்களும் ஆனந்திப்பர்கள் என்றபடி. பத்தர், ‘அறிவில்லாத சம்சாரிகள்
தங்களுடைய
சுக துக்கங்களுக்குத் தாம் காரணர் அல்லர்; ஈஸ்வரனாலே ஏவப்பட்டே
சுவர்க்கத்தையோ
நரகத்தையோ அடைகிறார்கள்;’ என்கிறபடியே, தாங்கள்
ஆனந்தியாமல் அவனுக்கு லீலா விஷயமாய்க்கொண்டு
அவனை ஆனந்திப்பிப்பர்கள்
என்றபடி. பத்தர்கள் ஈஸ்வரனுடைய ஆனந்தத்திற்குக் காரணமாயிருப்பர்கள்
என்பதற்குக்
காட்டும் மேற்கோள் ‘இன்புறும் இவ்விளையாட்டு உடையான்’ என்பது. இப்பாசுரம்,
திருவாய்.
3. 10 : 7. பத்தர் - கட்டுப்பட்டவர்.
|