இர
252 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
இராமல், ‘தனக்கேயாக
எனைக்கொள்ளும் ஈதே’ என்று பிரார்த்தித்தல் என்?’ என்று பிள்ளை திருநறையூர் அரையர் எம்பாரைக்
கேட்க, ‘அது கேளீர்; முன்பு பிரிந்து அன்று; பின்பு பிரிவிற்குக் காரணமுண்டாய் அன்று; இரண்டும்
இன்றி இருக்கச்செய்தே, 1‘அகலகில்லேன் அகலகில்லேன்’ என்று கூறும்படி செய்வது விஷயத்தின்
தன்மையே அன்றோ? அப்படியே, பேற்றிலே உள்ள ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறதுகாணும்’ என்று
அருளிச்செய்தார்.
2எம்
மா வீட்டில் எம் மா வீடாய், வைஷ்ணவர்கள் அனைவர்க்கும் செல்வமுமாய், உபநிடதத்தின் இரகசியப்
பொருளாய், சர்வேஸ்வரன் பக்கலிலே விரும்பிப் பெறுமதாய், இவ்வாத்துமாவுக்கு வகுத்ததுமான பாரதந்திரியத்தை
அவன் பக்கலிலே விரும்புகிறார்.
எனக்கே ஆட்செய்
எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி - முதலிலே ‘ஆள் செய்’
என்னவேண்டும்; இதனால், ஸ்வாதந்திரியத்தை வேறுபடுத்தி நீக்குகிறார்; ‘எனக்கு ஆள் செய்’
என்ன வேண்டும்; இதனால், அடையத் தகுதி இல்லாத மற்றையோரை வேறுபடுத்தி நீக்குகிறார்;
‘எனக்கே ஆள்செய்’ என்ன வேண்டும்; இதனால், தனக்கும் அவனுக்கும் பொதுவான நிலையைத் தவிர்க்கிறார்.
இதுதான் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி நிற்க வேண்டியதாதலின், ‘எக்காலத்தும்’
என்கிறார். 3’எனக்காக இதனைச் செய் என்று கூறுக, என்கிறபடியே, ‘இன்னதைச் செய்’
என்று ஏவிக்கொள்ள வேண்டியிருத்தலின், ‘என்று’ என்கிறார். ‘இப்படி ஒரு வார்த்தை
அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது; என்னுடைய மனத்திலே வந்து புகுதல் வேண்டும்’
என்பார், ‘என் மனக்கே
_____________________________________________________________
1. திருவாய் 6. 10 : 10.
2. ‘எம் மா வீட்டில் எம்
மா வீடாய்’ என்றது முதல் ‘விரும்புகிறார்’ என்றது முடிய,
பாசுரத்திற்கு அவதாரிகை. ‘எம் மா
வீட்டில் எம் மா வீடாய்’ என்றது. திருவாய்மொழி
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு பேற்றினை
அறுதியிடுதலைப் பற்றிக் கூறுகின்ற ‘எம்
மா வீடு’ பத்துப் பாட்டும் சாரமாயிருக்கும்; அவற்றில்
இது நிதானமான பாசுரமாகையாலே
சார தமமாயிருக்கும் என்றபடி. ‘வைஷ்ணவர்களனைவர்க்கும் செல்வமாய்’
என்றது. ‘ஸ்ரீ
வைஷ்ணவ அதிகாரிக்கு இப்பாசுரப்பொருள் அவசியம் அபேக்ஷிதம’ என்றபடி.
‘உபநிடதத்தின்
இரகசியப்பொருளாய்’ என்றது, கடவல்லியுபநிக்ஷத்துச் சித்தமான
துவயத்தில் ‘நம்:’ என்னும் பதத்தின்
பொருள் இங்குக் கூறப்படுகின்றது என்றபடி.
3. ஸ்ரீராமா. ஆரண். 15 :
7.
|