முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

அத

254

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

அதாவது 1பலகால் வேண்டா; ஒருகால் அமையும்; அதுதன்னிலும், திருவாசலைக் காப்பிட்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாகச் செய்யவும் அமையும். சிறப்பாவது, ஏற்றம். அதாவது, புருஷார்த்தம். ‘சொரூபத்திற்குத் தக்கதான புருஷார்த்தத்தைக் கொண்டருள வேண்டும்’ என்றபடி. ‘இனி, சிறப்பாவது, முத்தியும், செல்வமும், நன்றியும்’, என்றது, ‘நான் உன்பக்கல் கொள்ளும் மோக்ஷம் உனக்கேயாக எனைக் கொள்ளுமதுவே’ என்னுதல்; அன்றிக்கே, ‘உன் பக்கல் கொள்ளும் செல்வம் உனக்கேயாக எனைக்கொள்ளுமதுவே’ என்னுதல்; அன்றிக்கே, நன்றி உனக்கேயாக எனைக்கொள்ளுமதுவே’ என்னுதல் என்றபடி.             

(4)

205

        சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
        இறப்பில் எய்துக, எய்தற்க; யானும்
        பிறப்புஇல் பல்பிற விப்பெரு மானை
        மறப்புஒன்று இன்றி என்றும் மகிழ்வனே.

    பொ-ரை : யானும் சிறப்புடைய மோக்ஷம் என்ன, சுவர்க்கம் என்ன, நரகம் என்ன இவற்றை இறக்கின்ற காலத்தில் பொருந்துக. பொருந்தாதொழிக; பிறப்பு இல்லாத பல பிறவிகளையுடைய பெருமானை மறதி என்பது சிறிதும் இல்லாமல் எப்பொழுதும் அனுபவிப்பேன்.

    வி-கு : ‘சிறப்பில்’ என்பதில் ‘இல்’ பெயர்ச்சொல்; சிறப்பிற்கு இடமாயுள்ளது என்பது பொருள். எய்துக, எய்தற்க - வியங்கோள் வினைமுற்று. பின்னது, எதிர்மறை. ‘பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே’ என்ற பரிபாடலின் பகுதி இங்கு மூன்றாம் அடியோடு ஒப்பு நோக்குக.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. மேல், ‘மனம் வாக்குக் காயங்கள் இவை மூன்றாலும் உண்டான பேற்றை ஆசைப்பட்டு, இவை மூன்றாலும் உண்டான அனுபவத்தில் உன்னுடைய பிரீதியிலே உள் அடங்கி இருக்குமிதற்கு மேற்பட எனக்காய் இருக்கும் தன்மையைத் தவிர்க்க வேண்டும்’ என்றார். ‘இதுதான் சம்சாரிகள் பக்கல் நடையாடுவது ஒன்று அன்று; இவர்தாம் தம்மை யாராக நினைத்து இப்பேற்றை விரும்புகிறார் என்று ஆராய்ந்து பார்ப்போம்,’ என்று

_____________________________________________________________

1. ’சிறப்பு’ என்பது, ஒருகால விசேஷத்திலே ஒருகால் செய்யப்படுவதாதலின், ‘பலகால்
  வேண்டா; ஒருகால் அமையும்,’ என்கிறார். ‘கண்ணனை யான்’ என்ற ஒருமைக்கு பாவம்,
  ‘அதுதன்னிலும்’ என்று தொடங்கும் வாக்கியம்.