1
|
ஒன்பதாந்திருவாய்மொழி
- பா. 5 |
255 |
1‘நீர்
யாராகத்தான் நம்மை இப்படி விரும்புகிறீர்?’ என்ன, ‘தேகமே ஆத்துமா’ என்பார்; கேவலம் தேகத்திற்கு
இந்திரியம் ஒழிய அனுபவம் இல்லாமையாலே ‘இந்திரியங்களே ஆத்துமா’ என்பார்; அந்த இந்திரியங்களும்
மனத்தின் துணை இல்லாத போது பொருள்களை அறியமாட்டாமையாலே ‘மனமேகாண் ஆத்துமா’ என்பார்;
அம் மனந்தனக்கும் பிராணங்கள் துணை புரிய வேண்டுகையாலே, 2‘பிராணங்காண் ஆத்துமா’
என்பார்; ‘இவை எல்லாம் உண்டாயினும் உறுதிவேண்டுமே? அதற்குக் கருவி புத்தி ஆதலின், ‘புத்தி
தத்துவமேகாண் ஆத்துமா?’ என்பார்; ‘இவை இத்தனைக்கும் அவ்வருகாய் ஞானமாகிய குணத்தை உடையதாய்,
ஞானசொரூபமாய் இருப்பது ஒன்று ஆத்துமா’ என்பர் ஆகாநிற்பர்கள்; அதில் எனக்கு ஒரு நிர்ப்பந்தம்
இல்லை; ஏதேனுமாக, உண்டான பொருள் தேவர்க்கு உறுப்பாமிதுவே வேண்டுவது’ என்கிறார். 3‘நான்
சரீரம் முதலியவற்றுள் ஏதாவதொன்றாகவும், குணத்தினாலும் யாதேனும் ஒரு படிப்பட்டவனாகவும் இருக்கக்
கடவேன்; அவற்றில் எனக்கு ஒரு நிர்ப்பந்தம் இல்லை; ஆனால், இந்த ஆத்துமாவானது உன்னுடைய திருவடித்தாமரைகளில்
இப்பொழுதே என்னால் சமர்ப்பிக்கப்பட்டது,’ என்றார் ஸ்ரீ ஆளவந்தார்.
சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம் இறப்பில் எய்துக எய்தற்க
யானும் - ‘நித்திய சம்சாரியாய்ப் போந்தவன் நித்தியசூரிகளுடைய அனுபவத்தைப் பெற்று அனுபவிக்கக்
கூடியதாகச் சொல்லுகிற மோக்ஷம், அளவிற்கு உட்பட்ட சுகத்தையுடைய சுவர்க்கம், கலப்பு
_____________________________________________________________
1. ‘நீர் யாராகத்தான்’
என்றது, ‘நித்தியசூரிகளில் ஒருவராக நினைத்தோ?’ என்றபடி.
‘நித்தியசூரிகளிலே ஒருவனாகவுமாம்;
சம்சாரிகளில் ஒருவனாகவுமாம்’ என்பதனை
விரிக்கிறார், ‘‘தேகமே ஆத்துமா’ என்பார்’ என்று தொடங்கி.
2. பிராணன் - பத்துவாயுக்களுள்
சுவாசத்தை நிகழ்விப்பது, பத்து வாயுக்களாவன, பிராணன்.
அபானன், உதானன், வியானன்,
சமானன், நாகன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன்
என்பன.
3. ஸ்தோத்திர ரத்நம்.
‘மாத வங்களென் றோத வங்களின்
மருவு சீவனொன் றொருவ! நீ பெரும்
பூத மல்லைஇந் திரிய மல்லைஐம்
புலனு மல்லைநற் புந்தி அல்லைகாண்;
சீத ரன்பரந் தாமன் வாமனன்
றிருவ ரங்கனுக்கு அடிமை நீ; உனக்கு
ஏதும் இல்லைஎன் றறி:அ
றிந்தபின் ஈதின் மாதவ மில்லை எங்குமே.’
என்ற அருமைச்செய்யுள் ஈண்டு
நினைப்புக்கு வருகின்றது.
(திருவரங்கக்கலம். 63.)
|