அற
|
256 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
அற்ற துக்கமேயான நரகம்,
இவற்றை உடலை விடுகின்ற காலத்தில் அடைக, அடையாதொழிக,’ என்றது, ‘சரீரத்திற்கு வேறுபட்டதாய்
இருப்பது ஓர் ஆத்துமா உண்டாகவுமாம்: சரீரமே ஆத்துமா ஆகவுமாம்; இதில் எனக்கு ஒரு நிர்ப்பந்தம்
இல்லை,’ என்கை. அதாவது, ‘சரீரத்திற்கு வேறுபட்டதாய் இருப்பது ஒரு பொருள் உண்டானால் அன்றோ
சுவர்க்கம் முதலான அனுபவங்கள் உள்ளது? கேவல சரீரம் இங்கே எரிந்து போதலைக் காண்கிறோமே!’
என்றபடி. 1சொரூப நிர்ணயத்திலே நிர்ப்பந்தம் இன்று, ‘தாம் யாரேனுமாக அமையும்’
என்று இருக்கிறவராதலின், ‘யானும்’ என்கிறார். இனி ‘இப்பேற்றைப் பெறுதற்குத் தகுதி
இல்லாதவன்’ என்பார், ‘யானும்’ என்கிறார் எனலுமாம்.
பிறப்பு இல் பல்
பிறவிப் பெருமானை - பிறத்தற்குக் காரணமான கர்மம் இல்லாதிருக்கவும், கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும்
பிறவாத பிறவிகளிலே பிறக்க வல்ல, எல்லார்க்கும் தலைவனை. 2‘கர்மம் காரணமான
பிறப்பு இல்லாமல் இருக்கிற சர்வேஸ்வரன் இச்சை அடியாகப் பல விதமாக அவதரிக்கிறான்; அதன்
காரணத்தைப் பெரியோர்கள் அறிவார்கள், ‘என்பது மறைமொழி. மறப்பு ஒன்று இன்றி - அவதாரங்களிலும்
அவ்வவதாரங்களில் செய்யப்படும் செயல்களிலும் ஒரு மறதியும் இன்றி. இத்தலையில் உள்ளன எல்லாம்
மறக்கலாம். அத்தலையில் உள்ளனவற்றுள் ஒன்றும் நழுவஒண்ணாது ஆதலின், ‘மறப்பு ஒன்று இன்றி’
என்கிறார். என்றும் மகிழ்வன் - என்றும் அனுபவிப்பேன். ‘மகிழ்ச்சி, அனுபவம்’ என்பன ஒரு
பொருட்சொற்கள். ‘என்றும் அனுபவிப்பேன்’ என்கிறார். ஆக, இப்பாசுரத்தால் ஆத்துமசொரூபத்தை
வெளியிடுகிறார்; ‘பெருமான்’ என்கையாலே தம்முடைய சேஷத்துவமும்,
‘மறப்பொன்றின்றி’ என்கையாலே 3ஞாத்ருத்துவமும், ‘என்றும்’ என்கையாலே,
_____________________________________________________________
1. தேகத்திற்கு வேறுபட்டதாய்
இருப்பதொரு வஸ்து இருந்தால் தான் சரீரம் நீங்கிய
பின்னர்ப் புண்ணிய பாவங்களின் பலமான
மோக்ஷசுவர்க்க நரகங்களின் பலன்களை
அடைய முடியும்; ‘கேவலம் தேகமே ஆத்துமா’ என்றிருந்தால் அது
இங்கே
எரிக்கப்பட்டுவிடுகின்றமையால், சுவர்க்கம் முதலிய பதவிகளை அடைதல் முடியாது;
ஆகையால்,
‘எய்துக’ என்றது, தேகத்திற்கு வேறுபட்டதாய் இருப்பதோர் ஆத்துமாவைச்
சொல்லுகிறது. ‘எய்தற்க’
என்றது, தேகமே ஆத்துமா என்பதனைச் சொல்லுகிறது
என்றபடி.
2. யஜூர்வேதம் ஆ. பிர.
3. 8 : 17.
3. ஞாத்ருத்துவம் - அறியுந்தன்மை.
நித்தியத்துவம் - என்றுமுள்ள தன்மை.
போக்துருத்துவம் - நுகர்பவனாகுந்தன்மை.
|