ந
|
ஒன்பதாந்திருவாய்மொழி
- பா.
6 |
257 |
நித்தியத்துவமும்,
‘மகிழ்வு’ என்கையாலே போக்துருத்துவமும் அருளிச்செய்தமை காண்க.
206
மகிழ்கொள் தெய்வம்
உலோகம் அலோகம்
மகிழ்கொள் சோதி
மலர்ந்தஅம் மானே!
மகிழ்கொள் சிந்தைசொல்
செய்கைகொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை
வணங்கவா ராயே.
பொ-ரை :
மகிழ்ச்சியை யுடையவர்களான தேவர்கள். காணப்படுகின்ற அசித்து, கண்களால் காண முடியாத ஆத்துமாக்கள்,
மகிழ்ச்சியைக் கொள்ளச் செய்கிற ஒளி உருவமான சந்திர சூரியர்கள் ஆகிய இப்பொருள்களாக
விரிந்திருக்கின்ற தலைவனே! மகிழ்ச்சியையுடைய மனமும் சொல்லும் தொழிலும் ஆகிய இவற்றைக்கொண்டு
என்றும் மகிழ்ச்சியுடன் கூடி நான் வணங்கும்படி நீ எழுந்தருள வேண்டும்.
வி-கு :
நான்கு அடிகளிலும் ‘மகிழ்கொள்’ என வந்தது சொற்பொருட்பின் வருநிலை அணி. லோகம்
- காணப்படும் பொருள். அலோகம் - காணப்படாத பொருள். வாராய் - முற்று; உடன்பாட்டில்
வந்தது.
ஈடு :
ஆறாம் பாட்டு. 1‘தேவர்கள் முதலான பொருள்களை உண்டாக்கியது போன்று, என்னையும்
உன்னை நுகர்கின்றவனாகும் படியாகச் செய்ய வேண்டும்’ என்கிறார். இனி, ‘தேவர்கள் முதலான
பொருள்கட்கு ஒவ்வொரு தன்மை நியதராம்படி செய்தது போன்று, எனக்கு உன்னை அனுபவிக்குமது என்றும்
உள்ள தன்மையாகும்படி செய்தருளவேண்டும்’ என்கிறார் எனலுமாம்.
மகிழ் கொள் தெய்வம்
- போகப் பொருள்கள், போக உபகரணங்கள், போகத்தானங்கள் இவற்றாலே மனிதர்களைக்காட்டிலும்
ஆனந்தத்தால் மிக்கு இருந்துள்ள தேவர்கள். உலோகம். - 2‘லோக யத இதி- லோக:’
என்கிறபடியே, கண் முதலான உறுப்புகளுக்கு விஷய
_____________________________________________________________
1. இப்பாசுரத்திற்கு இரண்டு
அவதாரிகை: முதலது, ‘மலர்ந்த’ என்ற பதத்தைக் கடாட்சித்து
அருளிச்செய்கிறார். இரண்டாவது,
‘மகிழ்கொள்’ என்ற விசேஷணத்தைத் திருவுள்ளம்
பற்றி அருளிச்செய்கிறார். ‘ஒவ்வொரு தன்மை
நியதமாம்படி செய்தது போன்று’ என்றது,
ஆனந்தத்தையுடையதாதல், இந்திரியங்களால் அறியப்படுதல்,
இந்திரியங்களால்
அறியப்படாமை முதலாயினவற்றை.
2. ‘லோக்ய யத இதி -
லோக:’ என்றது, ‘பார்க்கப்படுவதாலே லோகம் என்று பெயர்
பெற்றது’
என்றபடி, லோக்யத -
பார்க்கப்படுதல்.
|