முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 8

259

    வி-கு : ‘மலர்க்கீழ்’ என்பதில் ‘கீழ்’ ஏழனுருபு. ‘எனக்கு’ - ஏழாம்  வேற்றுமையில் நான்காம் வேற்றுமை மயங்கியது. ‘எக்காலும் வாராய்’ எனக் கூட்டுக.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1தம்முடைய அன்பின் பெருக்காலே ‘எல்லாக்காலமும் என்னை அடிமை கொள்ள வரவேண்டும்’ என்கிறார்.

    உன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே யான் வந்து அடையும்படி தாராதாய்- உன்னுடைய 2நிரதிசய போக்கியமான திருவடிகளின் கீழே மீண்டு வருதல் இல்லாத பேற்றை யான் பெறும்படி உன்னை எனக்குத் தாராமல் இருக்கிறவனே! வாராத இன்னாப்பாலே, ‘தாரா தாய்’ என்று இதனை அவனுக்கு ஒரு நிரூபகமாகச் சொல்லுகிறார். 3அந்யபரோக்தியிலே பேற்றினை அறுதியிடுகிறார். உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய் - நிரதிசய போக்கியனான உன்னை வெளியில் காணாதபோது தரிக்கமாட்டாத என்னுடைய மனத்திலே உன்னைக்கொண்டு புகுந்து வைக்குமிடத்தில் ஒரு நாளும் அமையாதபடி இருக்கிறவனே! இதனால், ‘தர நினையாவிட்டால் நெஞ்சிலே பிரகாசிக்கின்ற அதனைத் தவிர்க்கவுமாம் அன்றே? அகவாய் பெரிய திருநாளாய்ச் செல்லாநின்றதே!’ என்கிறார். எனக்கு என்றும் எக்காலே - ‘என்னிடத்தில் எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் வரவேண்டும்.

    ‘உன் திருப்பாத மலர்க்கீழ்ப் பேராதே யான் வந்து அடையும்படி வாராய்’ என்று கூட்டலுமாம்.                                          

(7)

208

        எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில், மற்று
        எக்கா லத்திலும் யாதொன்றும் வேண்டேன்;
        மிக்கார் வேத விமலர் விழுங்கும்என்
        அக்காரக் கனியே! உன்னை யானே.

    பொ-ரை : மேம்பட்டவர்களாய் வேதங்களை அறிந்து குற்றம் அற்றவர்களாய் உள்ள பெரியோர்கள் நுகர்கின்ற, என்னுடைய வெல்

_____________________________________________________________

1. ‘மேல், ‘நின் செம்மா பாதபற்புத் தலைசேர்த்து’ என்றவர் இங்கும் ‘வாராய்’ என்கிறது
  என்?’ என்னும் வினாவிற்கு விடையாகத் ‘தம்முடைய அன்பின் பெருக்காலே’ என்று
  தொடங்கி அருளிச்செய்கிறார். ‘அன்பின் பெருக்காலே’ என்றது, புறம்பே காணுதலை
  விரும்பி என்றபடி.

2. நிரதிசயம் - தனக்குமேல் வேறு ஒன்றில்லாதது. போக்யம் - இனிய பொருள்.

3. அந்யபரோக்தி - வேறொன்றிலே நோக்குடைய சொல்.