முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

தனக

26

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

தனக்கே உரிமையாக்கினவன். அம் தாமம் தண் துழாய் ஆசையால் -‘அழகிய திருத்துழாய் மாலை பெற வேண்டும்’ என்னும் ஆசையாலே. 3 ‘கருமை நிறைந்த கண்களையுடைய பிராட்டி, கணவனாகிய ஸ்ரீராமபிரானால் மாலை அணிந்து  கௌரவிக்கப் பட்டாள்,’ என்ற பேறு பெறவேண்டும் என்று அதனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்றபடி. வேவாயே- 2‘உக்கக்காலுக்கு உளையக்கூடிய 3உன்உடம்பே நெருப்பாக வேகிறாயே!’ என்கிறாள்.   

(9)

120

        வேவாரா வேட்கைநோய் மெல்லாவி உள்உலர்த்த
        ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்தொழிந்தாய்
        மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்அளந்த
        மூவா முதல்வா! இனிஎம்மைச் சோரேலே.

    பொ - ரை : ‘கேசியினது வாயைப் பிளந்து, இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து உலகத்தையெல்லாம் அளந்த, காரியத்தில் சோம்புதல் இல்லாத முதல்வனே! சில நாள் வருந்த, அதனோடு அமையாது, மேன்மேலும் வருந்தும்படி வளர்ந்துகொண்டே செல்லுகின்ற வேட்கை நோயானது மிருதுவான உயிரை உள்ளேயுள்ள பசையெல்லாம் அறும்படி உலர்த்த, இடைவிடாது எல்லாக் காலங்களிலும் உன் குணங்களைக் காட்டி, என்னை, உன்பக்கல் விழ விட்டுக்கொண்டு, நீ கடக்க நின்றாய்; இனிமேல் நான் தளரும்படி விடாதொழியவேண்டும்; என்கிறாள்.

    வி - கு : ‘வேவ ஆரா’ என்பது, ‘வேவாரா’ என விகாரப்பட்டது. ‘வேவ ஆரா நோய்’ என்றும், ‘உலர்த்த வீழ்த்து ஒழிந்தாய்’ என்றும், ‘பிளந்து போய் அளந்த முதல்வா’ என்றும் முடிக்க. வீழ்த்தொழிந் தாய் - ஒரு சொல்லுமாம். ‘இருந்தொழிந்தாய்’ (1. 4 : 8) என்றார் முன்னும். ‘வேட்கை - பொருள்களின்மேல் தோன்றும் பற்றுள்ளம்’ என்பர் நச்சினார்க்கினியர் (தொல். எழுத். 288.) சோரேல்; எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது.

_____________________________________________________________

1. ஸ்ரீராமா. அயோத். 16 : 21.

2. உக்கம் - விசிறி; ‘உக்கமுந் தட்டொளியும் தந்து’ என்பது திருப்பாவை. கால் - காற்று,
  உளைதல் -கெடுதல்.

3. ‘ஆதிவெந் துயரலால் அருந்தல் இன்மையால்
  ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை’

(கம்பரா. மீட். 249.)