முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

லப

260

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

லப்பாகு தோய்ந்த கனியே! நீ எக்காலத்திலும் எனக்குத் தந்தையாய் என் மனத்தில் நிலைபெற்று இருப்பாயேயானால், யான் உன்னிடத்தில் எக்காலத்திலும் வேறு ஒரு பொருளையும் விரும்பமாட்டேன்’ என்கிறார்.

    வி-கு : ‘கனியே’ எக்காலத்திலும் எந்தையாகி என்னுள் மன்னில் யான் உன்னை எக்காலத்திலும் மற்று யாதொன்றும் வேண்டேன்,’ எனக் கூட்டிப் பொருள் காண்க. உன்னை -  உன்னிடத்தில்; ஏழாம் வேற்றுமையில் இரண்டாம் வேற்றுமை வந்தது, மயக்கம்.

    ஈடு : எட்டாம் பாட்டு. 1மிகச்சிறிய காலமாகிலும் சேஷியாய் என்னோடே கலக்கப் பெறில், பின்னை ஒரு காலமும் இதுவும் வேண்டா என்று, தமக்கு அடிமை செய்கையில் உண்டான விடாயின் மிகுதியை அருளிச்செய்கிறார்.

    எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் - இனிக் கூறு இட ஒண்ணாதபடி சிறு கூறான மிகச்சிறிய காலத்திலும், நீ ஸ்வாமியான முறை தப்பாதபடி என் மனத்திலே வந்து புகுரப்பெறில். மற்று எக்காலத்திலும் யாது ஒன்றும் வேண்டேன் - 2இஃது ஒழிந்த எல்லாக் காலத்திலும் பின்னை இதுதானும் வேண்டேன். ‘ஆயின், அப்படி ஒரு கால் அனுபவிப்பித்தால் பின்னர் விரும்பாரோ?’ எனின், குளிர் சுரத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ‘ஒருகால் நாக்கு நனைக்க’ என்று கூறுமாறு போன்று கூறுகின்றார்.  ‘ஆயின், ‘கணநேரம் அனுபவிக்க அமையும்’ என்னும்படியான பொருள் உளதோ?’ எனின், ‘மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக்கனியே அன்றோ?’ என்கிறார்; அதாவது, பகவானுடைய அனுபவத்தில் மிக்காராய், ‘எல்லாவற்றையும் அறிந்தவர்கள், பழையராய் இருந்தும் புதியராகவே காணப்படுகின்றவர்கள்’ என்கிறபடியே, வேதத்திலே குற்றமற்றவர்களாகச் சொல்லப்பட்டுள்ள நித்திய சூரிகள் அனுபவிக்கின்ற அக்காரம் போலவும், கனி போலவும் உள்ள உன்னுடைய இனிமையின் மிகுதியை எனக்குப் பிரகாசிப்பித்தவனே! அன்றோ?’ என்கிறார்.

_____________________________________________________________

1. ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தைப் பற்றி அவதாரிகை அருளிச் செய்கிறார்.

2. இஃது ஒழிந்த - மிகச் சிறிய காலமான இக்காலம் ஒழிந்த, ‘யாது ஒன்றும்’ என்றதற்கு
  பாவம் ‘பின்னை இதுதானும் வேண்டேன்’ என்பது. ‘பின்னை இதுதானும் வேண்டேன்’
  என்றது, ‘மிகச்சிறிய கால அனுபவமும்  வேண்டேன்’ என்றபடி.