என
ஒன்பதாந்திருவாய்மொழி
- பா.
8 |
261 |
என்றபடி. இனி, ‘அக்காரக்கனியே’
என்பதற்கு, 1அக்காரம் என்னும் மரமானது 2கோட்புக்குப் பழுத்த பழம்
போன்று நிரதிசய போக்கியன் ஆனவனே என்று பொருள் கோடலுமாம். ‘அக்காரக் கனியே’ என்ற இது.
நித்திய சூரிகளுக்கு எல்லா விதமான இனியபொருள்களும் தானேயாயிருக்கிறான் என்னுமிடத்துக்கு
உபலக்ஷணம். உன்னை நானே - ‘இப்படி எல்லை இல்லாத இனியனான உன்னை, உன்சுவடு அறிந்த நான், எக்காலத்து
எந்தையாய் என்னுள் மன்னில், மற்று எக்காலத்திலும் யாது ஒன்றும் வேண்டேன்’ என்கிறார் என்று
இங்ஙனம் ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்வர்.
இப்பொருளை,
எம்பெருமானார் கேட்டருளி, ‘இது பொருள் அழகியது; இவ்வாழ்வாருடைய தன்மைக்குச் சேராது,
3பெறிலும் பெறாதொழியிலும் சிறுகக் கோலமாட்டார்; இங்ஙனே ஆக வேண்டும்’ என்று
அருளிச்செய்வர். ‘எல்லாக் காலத்திலும் எனக்குச் சேஷியான நீ, நான் அடிமையான முறை தப்பாமல்
வந்து என் மனத்திலே புகுரப்பெறில், இக்காலம் எல்லாவற்றிலும் பின்னை இஃது ஒழிந்த மற்று ஒன்றையும்
யான் வேண்டேன்’ என்கிறார் என்பது.
(8)
_____________________________________________________________
1. அக்காரம் - மாமரம்.
2. கோட்புகுதல் - மரங்கள்
பயன் கொள்ளும் பருவத்தனவாதல்;
‘கோட்புகுகையாவது, பாலசூதாதிகள்
அபிநவமாகப் பலவத்துகரைகை’ என்பது ஈடு.
(5. 10 : 3.)
3. ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்;
மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.’
என்றார் திருவள்ளுவர்
(குறள். 596.)
4. ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாகத்திலே
‘எக்காலத்திலும்’ என்பதற்கு, ‘மிகச்சிறிய
காலத்திலும்’ என்பதும்,
‘யாதொன்றும் வேண்டேன்’ என்பதற்குப் ‘பின்னை இதுதானும்
வேண்டேன்’ என்பதும் பொருள். எம்பெருமானார்
நிர்வாஹத்தில், ‘எக்காலத்திலும்’
என்பதற்கு எல்லாக் காலத்திலும் என்பதும், ‘யாதொன்றும்
வேண்டேன்’ என்பதற்கு,
பகவத் வியதிரித்த புருஷார்த்தங்கள் ஒன்றும் வேண்டேன் என்பதும்
பொருள். ‘மிக்கார்
வேத விமலர் விழுங்கும் என் அக்காரக்கனியே! எக்காலத்து எந்தையாய் என்னுள்
மன்னில் எக்காலத்திலும் உன்னை யான் யாது ஒன்றும் வேண்டேன்’ என்பது
எம்பெருமானார் நிர்வாகத்தின்
அந்வயம்.
|