முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

என

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 9

263

என்பார் ‘இருந்தேன்’ என்கிறார். 1‘தீவினையேன் வாளா இருந்தேன்’ என்றார் பெரிய திருவந்தாதியில். 2‘நான் எல்லாத் தொண்டுகளையும் செய்வேன்’ என்கைக்குச் சம்பந்தம் உண்டாய் இருக்க, ஒரு காரியமும் இல்லாதாரைப் போன்று கையொழிந்திருந்தேன்; ‘முடிந்தேன்’ என்றது போன்று இருக்கின்றது; ஒரு நாளை இழவே போந்ததாக இருக்க, அநாதிகாலம் இழந்து போந்தேன் என்பார், ‘ஒழிந்தேன்’ என்கிறார்.

    ‘பொருளின் உண்மை அங்ஙனம் அன்றோ?’ என்ன, யானே நீ - யானும் நீயே. 3முத்தர்கள், 4‘நான் மநு ஆகிறேன், நான் சூரியனும் ஆகிறேன்’ என்னாநிற்பர்; சம்சாரத்தில் தெளிவுடையார் 5‘எல்லாப் பொருள்களும் என்னிடத்திலிருந்து உண்டாயின.’ எல்லாப் பொருள்களும் நானே’ என்னாநிற்பர்; இங்ஙனம் கூறுகைக்குக் காரணம் என்னை?’ எனின், ‘அஹம் பிரஹ்ம அஸ்மி - நான் ராஜபுத்திரன்’ என்னுமாறு போன்று, ‘நான் பிரஹ்மம்’ என்னலாம்படி அன்றோ 6சம்பந்தம் இருக்கும்படி? ‘ஆயின், 7‘அப்பொருள் வாசுதேவன்’ என்றதோ?’ எனின், அது வாசுதேவனுக்குச் சரீரம் என்றபடி. என் உடைமையும் நீயே - 8‘இவர்கள் எவனுக்கு உடையவர்களோ அவனுக்கு இவர்கள் அந்தச் செல்வம்’ என்கிறபடியே, ‘என் உடைமையும் நீயே’ என்கிறார். ‘இது எங்கே நிகழக்கண்டு சொல்லும் வார்த்தை?’ என்ன, ‘நித்தியசூரிகள் முழுதும் இப்படி அன்றோ உன்னை அனுபவிப்பது?’ என்கிறார் மேல்: வானே ஏத்தும் எம் வானவர் ஏறே - அவர்கள் தங்கள் அடிமைத் தன்மைக்குத் தகுதியாக அடிமை செய்யாநிற்க, இவனும் தன் சேஷித்

_____________________________________________________________

1. பெரிய திருவந். 82.

2. ஸ்ரீராமா. அயோத். 31 : 25.

3. ‘யானே நீ’ என்றது, சரீர ஆத்தும பாவ நிபந்தனம் என்று திருவுள்ளம் பற்றி, ‘இங்ஙனம்
  ஐக்கியமாகச் சொன்ன பேர் உளரோ?’ என்னும் வினாவிற்கு விடையாக ‘முத்தர்கள்’
  என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.

4. பிருகதாரண்ய உபநிடதம், 3.

5. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 19 : 85.

6. சம்பந்தமாவது, பிரகார பிரகாரி பாவ, காரிய காரண பாவ சம்பந்தங்கள்.

7. ஸ்ரீ விஷ்ணு புரா. 2. 12 : 15.

8. மஹாபாரதம், உத்யோக பர். திருதராஷ்டிரனைப் பார்த்து விதுரன் கூறியது இது.