முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

இளக

பத்தாந்திருவாய்மொழி - பா. 2

271

இளகிப்பதித்துச் செல்லாநிற்கும் சோலை சூழ்ந்த மாலிருஞ்சோலை. அடிமை செய்கிறவர்கள், கிளர் ஒளி இளமையையுடையவர்கள்; அடிமை கொள்ளுகிறவன், வளர் ஒளி மாயோன்; அடிமை செய்கிற தேசம், வளர் இளம்பொழில் சூழ் மாலிருஞ்சோலை. ஆக, இப்படி அடிமை செய்யுமவனும், அடிமை கொள்ளுமவனும், அடிமை செய்யும் தேசமும் ஒத்த பருவமாய் ஆயிற்று இருப்பது.

    தளர்வு இலர் ஆகில் - ‘முகூர்த்தகாலமாயினும் ஒரு கண நேரமாயினும் வாசுதேவனைச் சிந்திக்க இல்லை என்பது யாது ஒன்று உண்டு? அது பெரிய இழிவு; பெரிய கெடுதி’ என்கிறபடியே, 1‘திருமலையைக் கிட்டாமையால் வருகின்ற எவ்வகையான துக்கமும் இல்லாமல் இருக்க வேண்டில். இனி, ‘திருமலையே அடையத்தக்கது’ என்னும் புத்தி பிறந்து அதனை அடைவதற்கு விரோதியாய் வருகின்ற 2அனர்த்தபாகிகள் அல்லாதாராய் ஒழிய வேண்டில் எனலுமாம். சார்வதே சதிர் - திருமலையைக் கிட்டுமிதுவே இவ்வாத்துமாவுக்குச் சதிர்; அல்லாதவை எல்லாம் 3இளிம்பு. ‘கண்ணுக்கு இலக்கான விஷயங்களை விட்டு வேறே சிலவற்றைப் பெறுகைக்கு எண்ணுகின்றீர்கள்; நீங்கள் எண்ணுமதுவே இளிம்பு; இதுவே சதிர்’ என்றபடி.              

(1)

213

        சதிர்இள மடவார் தாழ்ச்சியை மதியாது,
        அதிர்குரல் சங்கத்து அழகர்தம் கோயில்
        மதிதவழ் குடுமி மாலிருஞ் சோலைப்
        பதியது ஏத்தி எழுவது பயனே.

    பொ-ரை : ‘அழகையும் இளமையையும் உடைய பெண்கள் தாழ்ச்சி தோன்றப் பேசும் வார்த்தைகளையும் செய்யும் செயல்களையும்

_____________________________________________________________

1. ‘தளர்விலராகில்’ என்பதற்கு, இருவகைப் பொருள் அருளிக் செய்கிறார்; முன்னையது,
  ‘திருமலையைச் சாராமையாகிற துக்கம் இன்றியே ஒழிய வேண்டில்’ என்பது. இஃது ஸ்ரீ
  ஆளவந்தார் நிர்வாஹத்துக்கு ஒட்டிய பொருள். பின்னையது, ‘திருமலையைக்
  கிட்டுகைக்கு விரோதியான பாவங்கள் இன்றியே ஒழிய வேண்டில்’ என்பது. இஃது
  எம்பெருமானார் நிர்வாஹத்துக்கு ஒட்டிய பொருள்.

2. அனர்த்த பாகிகள் - கேட்டினையடைகின்றவர்கள்.

3. இளிம்பு - சாமர்த்தியம் இன்மை.