முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

யத

பத்தாந்திருவாய்மொழி - பா. 3

273

யத்தைத் திருக்கையிலேயுடையராய் அச்சேர்த்தி அழகாலே 1அது தன்னையே தமக்குத் திருநாமமாக உடையவர், ‘அடியார்களைக் காப்பதற்கும் பாங்கான நிலம்’ என்று திருவுள்ளத்திலே விரும்பி, ‘என்னது’ என்று ஆதரித்து வசிக்கிற கோயில். மதி  தவழ் குடுமி மாலிருஞ்சோலை பதியது - சூற்பெண்டுகள் 2சுரம் ஏறுமாறு போன்று சந்திரன் தவழ்ந்து ஏறுகின்ற சிகரத்தையுடைய திருமலையாகின்ற பதியை. இனி, ‘மாலிருஞ்சோலைப்பதி’ என்பதற்கு, ‘மாலிருஞ்சோலையில் பதி’ என்று, ‘திருப்பதி’ என்று பொருள் கோடலுமாம். ஏத்தி எழுவது பயன் - சொரூபத்திற்குத் தகுதியான 3விருத்தி விசேஷத்தைப் பண்ணிப் பிழைக்குமிதுவே இவ்வாத்துமாவிற்குப் பயன்; அல்லாதவை பயன் அற்றவை. பயன் என்றது, ‘அடையத்தக்கது’ என்றபடி.                

(2)

214

        பயன்அல்ல செய்து பயன்இல்லை நெஞ்சே!
        புயல்மழை வண்ணர் புரிந்துஉறை கோயில்,
        மயல்மிகு பொழில்சூழ் மாலிருஞ் சோலை
        அயன்மலை அடைவது அதுகரு மம்மே.4

    பொ-ரை : மனமே! பயன் அற்ற காரியங்களைச் செய்வதால் பயன் இல்லை; மழை பெய்கின்ற மேகம் போன்ற திருநிறத்தையுடைய அழகர் விரும்பி வசிக்கின்ற கோயில், மயக்கம் மிகுதற்குக் காரணமான சோலைகள் சூழ்ந்த மாலிருஞ்சோலையின் அயலில் உள்ள மலையை அடைவதே செய்யத் தகும் காரியம்.

    வி-கு : ‘மழை புயல்’ என மாற்றுக. ‘கோயிலாகிய மாலிருஞ்சோலை’ என்க. உறை கோயில் - வினைத்தொகை. ‘மருவிய நன்னில மாண்பா கும்மே’, ‘அமைபவன் நூலுரை யாசிரி யன்னே’ என்பன

_____________________________________________________________

1. ‘அதுதன்னையே தமக்குத் திருநாமமாக உடையவர்’ என்றது, ‘சங்கத்தழகர்’ என்ற
  பெயரைக் குறித்தபடி. இனி, ‘பாண்டியர்களால் வளர்க்கப்பட்ட முதற்சங்கம் இடைச்சங்கம்
  கடைச்சங்கங்கட்குத் தலைவராகிய அழகர்’ என்று கோடலுமாம்.

  ‘அங்கத் தமிழ்மறை ஆயிரம் பாடி அளித்துலகோர்
  தங்கட்கு வீடு அரு ளும்புரு டோத்தமன் தண்வகுளத்
  தொங்கற் பராங்குசன் தாளிணை மாலிருஞ் சோலைமலைச்
  சங்கத் தழகர்அந் தாதி நடாத்தத் தலைக்கொள்வனே.’

  என்றார் திவ்விய கவி.

(அழகரந்தாதி. காப்பு)

2. சுரம் - மலை வழி.

3. விருத்தி விசேஷம் - வாசிகமான கைங்கரியம்

4. ‘கருமமே’ என்பது முன்னுள்ள பாடம்,