அயன
பத்தாந்திருவாய்மொழி
- பா. 4 |
275 |
அயன்மலை - திருமலையினது
சம்பந்தத்தையே தனக்குப் பெயராக உடைத்தான மலை. 1‘அகஸ்தியருக்கு உடன் பிறந்தவர்’
என்னுமாறு போன்று ‘மாலிருஞ்சோலை அயன்மலை’ என்கிறார். அடைவது அது கருமமே -
‘அஃதொன்றுமே செய்யத் தக்கது; அல்லாதவை அடையச் செய்யத் தகாதன’ என்கிறார்.
(3)
215
கருமவன் பாசம்
கழித்துஉழன்று உய்யவே
பெருமலை எடுத்தான்
பீடுஉறை கோயில்
வருமழை தவழும்
மாலிருஞ் சோலை
திருமலை அதுவே
அடைவது திறமே.
பொ-ரை :
‘கருமங்களாகிற வலிய பாசங்களைக் கழித்து அடிமை செய்து உய்யும்பொருட்டு, பெரிய மலையை எடுத்தவனான
கண்ணன் தனது பெருமையெல்லாம் விளங்கும்படி தங்கியிருக்கிற கோயில் வருகிற மேகங்கள் தவழும்படி
மிக உயர்ந்து பரந்த சோலைகளையுடைய திரு மலையை அடைவதுவே செய்யும் வகை’ என்றவாறு.
வி-கு :
‘உய்ய அடைவது திறம்’ எனக் கூட்டுக. இனி ‘உய்ய உறை கோயில்’ எனக் கூட்டலுமாம். எடுத்தான் -
வினையாலணையும் பெயர். ‘கோயிலாகிய திருமலை’ என்க.
ஈடு :
நாலாம் பாட்டு. ‘அடியார்கள் கர்மங்களின் தளையைப் போக்கி அடிமை செய்து வாழுகைக்கு ஈடாம்படி
சர்வேஸ்வரன் வாழ்கின்ற திருமலையை அடைகையே செய்யத்தகும் வகையாம்,’ என்கிறார்.
கருமம் வன் பாசம்
கழித்து உழன்று உய்யவே - 1திருமலையை அடையுமது ஒழிய இது நம்மாற்செய்து தலைக்கட்டப்போமோ?’
என்று இங்ஙனம் 2ஆழ்வார் ஓர் உருவிலே பணித்தாராம்; அங்ஙனமும் கொள்க.
இனி, எம்பெருமானார் ‘கருமவன் பாசம் கழிககைக்காகவும், கழித்து உய்கைக்காகவும்’ என்று
இங்ஙனம் அருளிச் செய்வார். அதாவது, ‘கர்மமாகிற வலிய பாசங்களைக் கழிககைக்காகவும், தன்
பக்கல் கைங்கரியத்தைச் செய்து உய்வு பெறுகைக்
_____________________________________________________________
1. ஸ்ரீராமா. ஆரண்.
2. ஆழ்வான் நிர்வாகத்தில்
‘உய்யவே’ என்றதிலுள்ள ஏகாரம், எதிர்மறை; ‘உய்யப்போகாது’
என்றபடி. ஆழ்வான் - கூரத்தாழ்வார்.
கூரத்தாழ்வாரை ‘ஆழ்வான்’ என்றும்,
நம்மாழ்வாரை ‘ஆழ்வார்’ என்றும் வழங்குதல் வைணவப்பெருமக்கள்
வழக்கு.
எம்பெருமானார் நிர்வாகத்தில் ஏகாரம், தேற்றம்; ‘உய்யவே உறைகின்ற கோயில்’
என்பதுபொருளாம்.
|