க
276 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
காகவும்’ என்றபடியாம்.
1முராசுரன் பல ஆயிரம் பாசங்களாலே தன்னை மறைய வரிந்து கொண்டு இருந்தது போன்று,
அறிவின்மை முதலியவைகளால் தன்னை மறைய வரிந்துகொண்டிருத்தலின் ‘கரும வன்பாசம்’ என்கிறார்.
பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில் -2‘பசுக்கள் ஆயர்கள் ஆயச்சிகள் எல்லாரும்
வருந்திக் கொண்டிருக்கிற அந்தக் கோகுலம் முழுதையும் கிருஷ்ணன் பார்த்து அப்போது சிந்தித்தான்’
என்கிறபடியே, ஆயர்களும் ஆய்ச்சிகளும் நோவுபட ஒரு மலையை எடுத்து நோக்கினவன், அந்த ஐஸ்வர்யத்தோடு
வந்து நித்தியவாசம் செய்யுங்கோயில். இதனால், அரியன செய்தும் அடைந்தவர்களைப் பாதுகாப்பவன்
என்பதனைத் தெரிவித்தபடி. ஐந்து லட்சம் குடிகளும் நிழலிலே ஒதுங்கலாம்படி மலையின் பரப்பு இருந்தது
ஆதலின், ‘பெருமலை’ என்கிறார். பீடு - பெருமை; என்றது, ஆபத்திற்குத் துணையாதல் முதலாயினவற்றை.
‘பெரு மலை எடுத்தான் பீடு உறை கோயில்’ என்றதனால், ‘ஒரு மலையை 3ஆதேயமாகக்
கொண்டு ரஷித்தவன், ஒரு மலையை ஆதாரமாகக் கொண்டு காப்பாற்றுகின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி.
‘ஆயின், திருமலையில் நிற்றல் காத்தலுக்கோ?’ எனின், 4‘சாதுக்களைக் காத்தற்காகவும்,
துஷ்டர்களை அழித்தற்காகவும், தர்மங்களை நிலைநிறுத்துதற்காகவும், யுகந்தோறும் பிறக்கிறேன்’
என்கிறபடியே, விரோதிகளைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கை அன்றோ 5அவதாரங்களுக்குப்
பிரயோஜனம்?
வருமழை தவழும்
மால் இருஞ்சோலை திருமலை அதுவே - சூற்பெண்டுகள் சுரம் ஏறுமாறு போன்று மேகங்கள் நடமாடு
_____________________________________________________________
1. முராசுரன் என்பவன்,
பிராக்ஜோதிஷபுரம் என்ற நகரத்திலிருந்து அரசாண்ட
நரகாசுரனுக்கு அமைச்சனாவான்; இவன் தன்
அரசனுக்கும் தனக்கும் பகைவர்களால் கேடு
வாராதவாறு நூறு யோசனைத் தூரம் பாசங்களைக் கொண்டே
சுற்றிலும் சுற்றி,
அதனையே ஓர் அரணாக அமைத்துக்கொண்டிருந்தான் என்றும், பின்பு கண்ணபிரானால்
அப்பாசங்களும் அறுக்கப்பட்டு இவனும் கொல்லப்பட்டான் என்றும் கூறுகிற வரலாறு
இங்கு அறிதல் தகும்.
2. ஸ்ரீ
விஷ்ணு புரா. 5. 11 : 13.
3. ஆதேயம் - தாங்கப்படுவது.
ஆதாரம் - பற்றுக்கோடு; தாங்குவது.
4. ஸ்ரீகீதை. 4 : 8.
5. இறைவனுடைய ஐவகை
நிலைகளுள் ஒன்றான அர்ச்சையும் ‘அவதாரம்’ எனப்படும்;
‘அர்ச்சாவதாரம்’ என வழங்குதல் காண்க.
அர்ச்சையாவது, வணங்கி வழிபடுவதற்குத்
தகுதியாக விக்கிரக ரூபமாயிருத்தல்.
|