க
பத்தாந்திருவாய்மொழி
- பா. 5 |
277 |
கின்ற மாலிருஞ்சோலையாகிய
திருமலையை. இனி, ‘மாலிருஞ்சோலை திருமலை’ என்பதற்கு ‘மாலிருஞ்சோலையையுடைத்தான திருமலை’ என்று
பொருள் கூறலுமாம். ‘மால் இரும்’ என்ற இரண்டும் ஒரு பொருளன; ஒன்று உயர்விலே; ஒன்று பரப்பிலே.
1நின்ற இடத்தே நின்று பெய்வது ஒரு மேகமும், போவதும் வருவதுமாய் இருந்து பெய்வது
ஒரு மேகமும் என ஊர்க்கு மேகம் இரண்டாதலின்’ ‘வருமழை தவழும்’ என்கிறார். ‘ஆயின்,
இறைவன் மேகமோ?’ எனின், ‘புயல் மழை வண்ணர்’ என்றாரே முன்னர்? 2‘மிக
அதிகமான தண்ணீரைத் தாங்குவனவும், கொக்குகளின் வரிசையையுடையனவும், ஒலிப்பனவுமான மேகங்கள்,
மலைகளின் பெரிய கொடுமுடிகளில் இளைப்பாறி இளைப்பாறி மீண்டும் செல்கின்றன’ என்பவாகலின்,
‘மழை தவழும்’ என்கிறார். அடைவது திறமே - அடையுமதுவே செய்திறம். ‘செய்யப்படுவது
இதுவே’ என்றபடி.
(4)
216
திறமுடை வலத்தால்
தீவினை பெருக்காது,
அறம்முயல் ஆழிப்
படையவன் கோயில்
மறுவில்வண் சுனைசூழ்
மாலிருஞ் சோலைப்
புறமலை சாரப் போவது
கிறியே.
பொ-ரை : பல வகையான வலிமைகளால் கொடிய பாவங்களைச்
செய்து மிகுதியாக்கிக்கொள்ளாது, அறத்தையே செய்கின்ற சக்கரப் படையைத் தரித்த இறைவன்
வாழ்கின்ற கோயில், குற்றமற்ற வளவிய சுனைகள் சூழ்ந்த மாலிருஞ்சோலைக்குப் புறம்பே உள்ள
மலையைச் சாரப் போதல் நல்ல உபாயமாகும்.
வி-கு :
‘பெருக்காது சாரப் போவது’ எனக் கூட்டுக, போவது - தொழிற்பெயர்.
ஈடு :
ஐந்தாம் பாட்டு. ‘திருமலைக்குப் புறம்பான மலையை அடைகையே நல்லுபாயம்’ என்கிறார்.
திறமுடை வலத்தால்
தீவினை பெருக்காது - திரண்ட பலத்தாலே வேறு பயன்களை ஆசைப்படுதலாகிற பெரிய பாவத்தைக் கூடுபூரியாமல்.
திறம் - கூட்டம். அறம் முயல் ஆழ்ப்படையவன் கோயில் -3‘அறிவுடைய இலக்குமணன்’
என்கிறபடியே, அடியார்
_____________________________________________________________
1. நின்றவிடத்தே
நின்று பெய்வதொரு மேகம் - சங்கத்தழகர்.
2. ஸ்ரீராமா. கிஷ்.
28 : 22.
3. ஸ்ரீராமா. சுந்.
16 : 4 இங்கு, பெருமாளைக் காட்டிலும் அடியார்களைக் காப்பதில்
சிரத்தையுள்ளவன் இலக்குமணன்
என்பதனைக் காட்டுவதற்காக ‘அறிவுடைய
இலக்குமணன்’ என்கிறார்.
|