வசப
எட்டாந்திருவாய்மொழி - பா. 4 |
219 |
வசப்பட்டிருத்தலைத் தவிர்ந்து.
சிலபொருள்களை 1வறை நாற்றத்தைக் காட்டி முடிக்குமாறு போன்று, புலன்களிலே மூட்டி
நசிப்பிக்கையாலே, இந்திரியங்களைப் ‘பொறி’ என்கிறது. இத்தால், ‘ஓர் அளவிற்கு உட்பட்ட
பொருள்களைப் பற்றுகின்ற இந்திரியங்கட்கு வசப்பட்டு இருத்தலைத் தவிர்ந்து’ என்றபடி. நலம்
அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர் - நன்மைக்கு முடிவு இன்றியே இருக்கின்ற நாட்டிலே புகவேண்டி
இருப்பீர்! 2‘ஸ்வ விநாசங்காண் மோக்ஷம்’ என்கை அன்றி, 3ஆபத தமரான
இவர் நன்மைக்கு முடிவு இல்லாதது ஒரு 4தேச விசேஷம் உண்டாக அருளிச்செய்து வைத்தாரே
அன்றோ! இப்பேற்றுக்கு இசைவே அதிகாரம் என்பார் ‘புகுவீர்’ என்கிறார்.
‘அது ஒரு நாடும் உண்டாய்,
‘அது பெறவேண்டும்’ என்னும் நசையும் உண்டானாலும், பிரபல விரோதிகள் கிடக்குமாகில் பிரயோஜனம்
இல்லையே?’ என்னில், அலமந்து வீய அசுரரைச் செற்றான் - தடுமாறி முடிந்து போகும்படி அசுரர் கூட்டத்தை
அழியச் செய்தான். இதனால், ‘விரோதி போக்குகை நம் பணியோ?’ என்கிறார். பலம் முந்து சீரில்
படிமின் - அவனுடைய பலம் முற்பட்டிருக்கின கல்யாணகுணங்களிலே அன்புடையர் ஆகுங்கோள். 5‘செய்வதற்குச்
சுக ரூபமாக இருக்கும், நினைத்த பலன்களைக் கொடுத்துத் தான் அழிவில்லாமல் இருக்கும்’ என்னும்படி
அறுதி செய்யப்பட்ட விஷய 6சாரஸ்யத்தாலே, சாதன தசையே தொடங்கி இனியதாய்
இருத்தலின் ‘பலம் முந்து சீர்’ என்கிறார். ஓவாதே - ‘பௌர்ணமி அல்லாத மற்றை நாள்களில்
கடல் தீண்டலாகாது’ என்னுமாறு போன்று ஒரு நியதி இலை இதற்கு; மாறாமல் அடை
_____________________________________________________________
1. வறை நாற்றம் - தீ நாற்றம்.
2. ‘ஸ்வ விநாசங்காண்
மோக்ஷம்’ என்றது, ‘இச்சரீரம் அழிதலே மோக்ஷம்’ என்றபடி.
3. ஆப்த தமர் - நம்பத்
தகுந்தவர்களில் மிக உயர்ந்தவர்.
4. ‘யான்எனது என்னுஞ்
செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
‘தாழ்வீழ்வார் மென்றோள்
துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு?’
என்றார் தெய்வப்புலமைத்
திருவள்ளுவனாரும்.
5. ஸ்ரீ கீதை, 9 : 2.
6.
சாரஸ்யம் - ரசத்தோடு
கூடியிருக்குந் தன்மை.
|