முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

பத்தாந்திருவாய்மொழி - பா. 9

283

‘ஆயின், பிரபந்நர்கள் வலஞ்செய்யலாமோ? வலம் செய்தல் உபாய கோடியில் சேராதோ?’ எனின், ‘பிள்ளை திருநறையூர் அரையரும் பட்டரும் பிரதக்ஷணம் பண்ணாநிற்கப் பின்னே சேவித்துக்கொண்டு போனேன்; 1அல்லாதார் கடுங்குதிரை போலே வாராநிற்க, இவர்கள் திருக்கோபுரங்களையும் திருமாளிகைகளையும் 2கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்துக்கொண்டு வந்தார்கள்,’ என்று நஞ்சீயா அருளிச்செய்வர். நாளும் மருவுதல் வழக்கே -3நித்திய சூரிகளுடைய யாத்திரையே தனக்கு யாத்திரையானால் பின்னே மறுவல் இடாது; இதுவே வழக்கு.                                  

(8)

220

        வழக்குஎன நினைமின் வல்வினை மூழ்காது
        அழக்கொடி அட்டான் அமர்பெருங் கோயில்
        மழக்களிற்று இனம்சேர் மாலிருஞ் சோலை
        தொழக்கரு துவதே துணிவது சூதே.

    பொ - ரை : ‘கொடிய பாவங்களில் மூழ்காமல், பேயான பெண்ணை அழித்தவன் எழுந்தருளியிருக்கிற கோயில், இளமையான யானைக் கூட்டங்கள் சேர்ந்திருக்கின்ற திருமாலிருஞ்சோலையைத் தொழவேண்டுமென்று கருதுதலைத் துணிதலே வெற்றிக்குக் காரணம்; இதனை முறை என்று நினைமின்.’

    வி-கு : ‘மூழ்காது தொழக் கருதுவது’ என முடிக்க. கருதுவது துணிவது என்பன, தொழிற்பெயர்கள். அழன் + கொடி - அழக்கொடி; அழன் - பிணம். கொடி - பெண்ணுக்கு ஆகுபெயர்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘திருமலையைத் தொழுவோம்’ என்று அறுதியிட்டு நினைக்கை அமையும் வெற்றிக்குக் காரணம்,’ என்கிறார்.

    வழக்கு என நினைமின் - நான் சொல்லுகிற இதுவே முறை என்று புத்தி பண்ணுங்கோள். வல்வினை மூழ்காது - உங்களால்

_______________________________________________________

1. அல்லாதார் - சாதனத்தைக் கருதி வலம் செய்யுமவர்.

2. ‘கண்களாலே பருகுவாரைப் போலே’ என்கையாலே, பிராப்பியத்துவம் தெளிவாம்;
  ‘சாதனம் கருதி அன்று’ என்பது வெளிப்படை.

3. நித்திய சூரிகளைப் போன்று கைங்கரியமே தாரக போஷக போக்கியங்களானால், வேறு
  பயன்களினுடைய ஆசைக்கும், அதன் மூலமாக உண்டாகும் சாதன புத்திக்கும்
  காரணமில்லை என்பதனை விளக்க வந்தது ‘நித்தியசூரிகள்’ என்று தொடங்கும்
  வாக்கியம். மறுவலிடாது - திரும்பாது.